அணு ஆயுதம்: வட கொரியா விதிக்கும் நிபந்தனை
Subscribe to Oneindia Tamil
சியோல்:
அமெரிக்கா தனது அணு ஆயுதங்களை முற்றிலும் அழிக்க முன்வந்தால் வட கொரியாவும் தனது அணு ஆயுததிட்டங்களை நிறுத்தத் தயாராக இருப்பதாக அந்நாடு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வட கொரிய செய்த நிறுவனத்திற்கு வட கொரிய அரசு உயர் அதிகாரி ஒருவர் அளித்துள்ளபேட்டியில், வட கொரியா தனது அணு ஆயுத திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கத் தயாராக உள்ளது. ஆனால்அதற்கு முன்பு அமெரிக்கா தனது அணு ஆயுதங்களை ஒழிக்க வேண்டும். அணு ஆயுதத் திட்டங்களுக்குமுற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.அதுவரை, வட கொரியாவின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு எங்களது ஆயுத பலத்தை அதிகரிப்போம்.ஏவுகணைகளை பரிசோதிப்பது, அணு ஆயுதங்களை பெருக்குவது ஆகியவற்றையும் நாங்கள் நிறுத்த மாட்டோம்.
அமெரிக்கா எங்களது கோரிக்கைக்கு முன்வந்தால், ஆறு நாடுகள் பேச்சுவார்த்தைக்கு நாங்களும் முன்வருவோம்.அமெரிக்கா முன்வராத வரை எங்களது திட்டத்திலும் மாற்றம் செய்ய முடியாது என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications