சென்னை: வன்முறையில் ஈடுபட்ட 311 பேர் கைது
சென்னை:
சென்னை நகரில் வாக்குச் சாவடிகளில் வன்முறை மற்றும் தாக்குதலில் ஈடுபட்டதாக அதிமுக எம்.எல்.ஏக்கள்கலைராஜன், சேகர்பாபு உள்ளிட்ட 311 பேர் கைது செய்யப்பட்டுள்ளாதாக மாநகர காவல்துறை ஆணையர்லத்திகா சரண் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சித் தேர்தலில் பெருமளவில் வன்முறை மூண்டது. இதைத் தொடர்ந்து டிஜிபி முகர்ஜி, மாநகரகாவல்துறை ஆணையர் லத்திகா சரண் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.டிஜிபி முகர்ஜி பேசுகையில், சென்னை நகரில் வன்முறையில் ஈடுபட்டதாக 311 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
லத்திகா சரண் பேசுகையில், சென்னை நகரில் 12 இடங்களில் மறியல் நடந்தது. அதில் ஈடுபட்டவர்கள் கைதுசெய்யப்பட்டனர். சில இடங்களில் வாக்குப் பெட்டிகள் சூறையாடப்பட்டன.
மோதலில் 3 போலீஸார் காயமடைந்தனர். அவர்களில் 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.வாக்குப்பதிவின்போது உடலில் ரத்த சாயத்தை பூசிக் கொண்டு நாடகமாடியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
வன்முறையில் ஈடுபட்டதாக அதிமுக எம்.எல்.ஏக்கள் சேகர்பாபு, கலைராஜன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications