For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மலை கிராமத்தில் பிறந்த நாள் கொண்டாடிய கலாம்

By Staff
Google Oneindia Tamil News

சாம்ராஜ் நகர்:

குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், தனது 76வது பிறந்த நாளை, கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் மாவட்டத்தில்உள்ள பி.ஆர்.ஹில்ஸ் மலை கிராமத்தில், பழங்குடியினருடன் வித்தியாசமான முறையில் கொண்டாடினார்.

அப்துல் கலாக்கு இன்று 75 வயது முடிந்து 76 வயது பிறந்தது. குடியரசுத் தலைவர் பதவிக்கு வந்தது முதல் கடந்தநான்கு ஆண்டுகளாக தனது பிறந்த நாளை அவர் குடியரசுத் தலைவர் மாளிகையில் கொண்டாடியதில்லை.

மாறாக, குழந்தைகளுடன், மாணவர்களுடன், கிராமத்தினருடன், கல்வி நிலையங்களில் என வித்தியாசமாகவேகொண்டாடி வந்துள்ளார். அதேபோல இந்த பிறந்த நாளையும் அவர் வித்தியாசமாக கொண்டாடினார்.

இதற்காக டெல்லியிலிருந்து கர்நாடகம் வந்த கலாம், சாம்ராஜ் நகர் மாவட்டத்தில் உள்ள பி.ஆர்.ஹில்ஸ் மலைகிராமத்திற்கு சென்றார். அங்குள்ள விவேகானந்தா கிரிஜனா கேந்திரா என்ற அமைப்புக்குச் சொந்தமான கல்யாணமண்டபத்தில் அந்த அமைப்பின் வெள்ளி விழா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் கலாம் கலந்து கொண்டார். அப்போது அங்கு திரண்டிருந்த பழங்குடியின குழந்தைகள் தமிழ், கன்னடம்,ஆங்கிலத்தில் கலாக்கு பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இதைக் கேட்டதும் கலாம்சந்தோஷமடைந்தார்.

அதன் பின்னர் மாணவர்கள் கலாமுக்கு பூங்கொடுத்த கொடுத்தனர். இந்த விழா கலாமின் பிறந்த நாள் விழாவாகமாறியது. விழாவில் கர்நாடக ஆளுநர் டி.என்.சதுர்வேதி, துணை முதல்வர் எட்டியூரப்பா உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

கடந்த ஆண்டு தனது பிறந்த நாளை மைசூரில் உள்ள சுட்டூர் மடத்தில் ஏழை சிறுவர், சிறுமியிருடன் தனது பிறந்தநாளை கலாம் கொண்டாடினார் என்பது நினைவிருக்கலாம்.முன்னதாக பி.ஆர்.ஹில்ஸ் கிராமத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் வந்திறங்கிய கலாம், மலையின் அழகை பார்த்துரசித்தார். சிறிது நேரம் மலை முகட்டை மூடியபடி மேகக் கூட்டம் திரண்டிருந்ததை பார்த்து ரசித்தார்.

இப்பகுதியை பாதுகாப்பது இயற்கை வளத்திற்கு மிகவும் அவசியம் என்று அதிகாரிகளிடம் அவர் கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X