நாங்கள் கணவன்-மனைவி அல்ல: ரகு-சுதாராணி
சென்னை:ராக்கெட் லாஞ்சர் வழக்கில் போலீஸ் வசம் சிக்கியுள்ள ரகுவும், சுதாராணியும், தாங்கள் கணவன், மனைவி அல்லஎன்று ஆந்திர போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
சென்னையிலிருந்து ராக்கெட் லாஞ்சர்களை ஆந்திராவில் உள்ள நக்சலைட் அமைப்புகளுக்கு கடத்திய வழக்கில்ரகு என்கிற மது என்கிற சீனிவாச ரெட்டி மற்றும் சுதாராணி என்கிற வசந்தா ஆகியோரை போலீஸார் தேடிவந்தனர். போலீஸாரின் தீவிர வேட்டையிலிருந்து தப்பி வந்த இருவரும் சமீபத்தில் ஆந்திர போலீஸில்
சரணடைந்தனர்.இருவரிடமும் ஆந்திர போலீஸார் தனித்தனியாக விசாரணை நடத்தி வாக்குமூலம் பெற்றுள்ளனர். இதில்இருவரும் பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
இதில் சுதாராணி கொடுத்துள்ள வாக்குமூலத்தை போலீஸார் வெளியிட்டுள்ளனர். அதில் சுதாராணிகூறியுள்ளதாவது: எனது குடும்பத்தில் 3 சகோதரிகள், 2 அண்ணன்கள் மற்றும் ஒரு தம்பி ஆகிய அனைவருமேராமகிருஷ்ணா என்பவரது தலைமையிலான நக்சலைட் இயக்கத்தில் இணைந்தோம்.
எனது 16வது வயதில் நான் நக்சலைட் இயக்கத்தில் சேர்ந்தேன். ஆனால் நக்சலைட்டுகள் நல்லவர்கள் அல்லஎன்பது போகப் போகத் தெரிந்தது. அங்கு பெண்களை கற்போடு வாழ விட மாட்டார்கள். சேர்ந்தவுடன் முதலில்பெண்களின் கற்பைத்தான் பறிக்கிறார்கள். யாரும் திருமணம் செய்து கொள்ள முடியாது.
வரைமுறையில்லாமல் பெண்களுடன் உறவு கொள்வார்கள். ஆடு, மாடுகளுக்கும் இவர்களுக்கும் வித்தியாசம்கிடையாது. கொள்கை, கோட்பாடு என்று எதுவும் கிடையாது.
நானும், ரகுவும் கணவன் மனைவி கிடையாது. இருவரும் நல்ல நண்பர்கள். செக்ஸ் தொல்லை தாங்கமுடியாமல்தான் நான் ரகுவுடன் சென்னைக்கு வந்து விட்டேன். ஆனால் இங்கு வந்த பின்னர் எங்களை ராக்கெட்லாஞ்சர்களை தயாரித்து அனுப்ப ராமகிருஷ்ணா உத்தரவிட்டார்.
2004ம் ஆண்டு ஜூலை 17ம் தேதி நாங்கள் சென்னைக்கு வந்தோம். முதலில் நண்பர்கள் என்று கூறி வாடகைக்குவீடு தேடினோம். ஆனால் யாரும் வீடு கொடுக்கவில்லை. இதையடுத்தே கணவன், மனைவி என்று பொய்சொல்லி வீடு பிடித்தோம்.
இருவரும் நான்கு வருடங்களாக ஒரே வீட்டில் வசித்து வந்தோம். ஆனால் ஒரு நாள் கூட தவறான உறவுகொண்டதில்லை. போலீஸ் தேடுவதை அறிந்ததும் ஆந்திராவுக்கு வந்து விட்டோம்.
பெண்களை இழிவாக நடத்தும் நக்சலைட் இயக்கத்தில் மீண்டும் சேர எனக்கு விருப்பம் இல்லை. எனவேதான்போலீஸில் சரணடைய முடிவு செய்தோம். போலீஸார் எங்களை நல்லபடியாக நடத்தினால் மேலும் பலநிக்சலைட்டுகள் மனம் திருந்தி சரணடைய முன் வருவார்கள். எனது குடும்பத்தினரும் சரணடைவார்கள் என்றுகூறியுள்ளார் சுதாராணி.
இதேபோலவே ரகுவும் வாக்குமூலத்தில் தெவித்துள்ளார். நக்சலைட்டுகள் பெண்களின் கற்பைசூறையாடுவதாகவும், தலைவர்கள் அந்தஸ்தில் இருப்பவர்கள் தங்களுக்குக் கீழ் உள்ள அத்தனைபெண்களுடனும் உறவு வைத்துக் கொள்வார்கள் என்றும், பெண்கள் கிடைக்காவிட்டால் ஓரினச் சேர்க்கையில்ஈடுபடுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications
