ராப்ரி ராக்கெட்...லாலு பாராசூட்...
பாட்னா:மத்திய அமைச்சர் லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவியும் முன்னாள் பீகார் முதல்வருமான ராப்ரி தேவி,பீகார் முதல்வர் நதீஷ் குமார் ஆகியோரது பெயர்கள் தாங்கிய பட்டாசுகள் பீகார் மாநிலத்தில் படு சூடாகவிற்பனையாகியுள்ளன.
தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் நேற்று வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. இதையொட்டிபட்டாசு விற்பனையும் அமோகமாக இருந்தது.
பட்டாசுகளுக்குப் பெயர் வைத்து விற்பது பல காலமாக நிலவி வரும் வழக்கமாகும். ஆனால் பீகார் மாநிலத்தில்மட்டும் வித்தியாசமான பெயர்களைத் தாங்கிய பட்டாசுகள் படு விறுவிறுப்பாக விற்பனையாகின.
இதற்குக் காரணம், லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி, நிதீஷ் குமாரின் பெயர்களில் பட்டாசுகள் மார்க்கெட்டுக்குவந்ததுதான்.
லாலு -ராப்ரி பாராசூட், ராப்ரி ராக்கெட், நிதீஷ் புஸ்வானம், நிதீஷ் வெங்காய வெடி ஆகியவை அவற்றில் சில.இதேபோல சோனியா காந்தி, கவர்ச்சி வெடிகுண்டு மல்லிகா ஷெராவத் ஆகியோரது பெயர்களிலும் பட்டாசுகள்விற்கப்பட்டன.
மற்ற வகைப் பட்டாசுகளை விட இந்த வகைப் பட்டாசுகள்தான் அதிகம் விற்பனையாகியுள்ளதாம்.வாடிக்கையாளர்களை இந்தப் பெயர்களில் இருந்த பட்டாசுகள் அதிகம் கவர்ந்ததாகவும் இவற்றை போட்டிபோட்டுக் கொண்டு வாங்கிச் சென்று வெடித்து மகிழ்ந்ததாகவும் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும் சோனியா, நிதீஷ் பெயரிலான பட்டாசுகளை விட லாலு, ராப்ரி பெயர்கள் தாங்கிய பட்டாசுகள்தான்அமோகமாக விற்றதாம்.












Click it and Unblock the Notifications