For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தொழிலதிபரின் மகளின் மெகா கார் மோசடி

By Staff
Google Oneindia Tamil News

Meenakshi Reddyசென்னை:விலை உயர்ந்த கார்களை வாடகைக்கு எடுத்து அவற்றை விற்றும், உதிரிபாகங்களைகழற்றி விற்றும் மோசடி செய்ததாக பிரபல தொழிலதிபர் ஓபுல் ரெட்டியின் மகள்மீனாட்சி ரெட்டியை சென்னை போலீஸார் கைது செய்துள்ளனர்.

அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ் அதிபர் பிரதாப் ரெட்டியின் சம்பந்தி தான் இந்த ஓபுல்ரெட்டி. நிப்போ பேட்டரிகள் உள்ளிட்ட பல்வேறு எலக்ட்ரிகல் உபகரணங்கள்தயாரிக்கும் நிறுவனங்களை நடத்தி வருகிறார் ஓபுல் ரெட்டி.

இவரது மகள் மீனாட்சி ரெட்டி. இவரது கணவர் விஜயவர்த்தன் ரெட்டி. இவர்கொடுங்கையூரில் பிளாஸ்டிக் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

Mathewகடந்த ஒரு வருடமாக மீனாட்சி ரெட்டி தமிழகத்தைச் சேர்ந்த பல டிராவல்ஏஜென்சிகளிடம் வாடகைக்கு கார்களை எடுத்து வந்துள்ளார். சென்னையில் மட்டும்70க்கும் மேற்பட்ட கார்களை இப்படி வாடகைக்கு எடுத்துள்ளார்.

இந்தக் கார்களுக்கு அவர் முறையாக வாடகை கொடுக்கவில்லை. மேலும் பலகார்களை விற்று விட்டார். மற்ற கார்களிலும் கூட என்ஜின் உள்ளிட்ட பாகங்களைகழற்றி விற்று விட்டு பழைய என்ஜின்களை மாட்டி திருப்பித் தந்துள்ளார்.

இந்த வகையில் மீனாட்சிக்கு 25 கார்களை வழங்கிய ஒரு நிறுவனம் தனது கார்களைதிருப்பித் தரக் கோரி மீனாட்சியிடம் கேட்டது. அப்போது தான் அவர் கார்களைவிற்றுவிட்டது தெரியவந்தது.

இதையடுத்து அந்த நிறுவனம் போலீசில் புகார் கொடுத்தது. மேலும் பலநிறுவனங்களும் சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸாரிடம் புகார்களைகுவித்தனர்.

ஆனால் தனது தந்தையின் செல்வாக்கைப் பயன்படுத்தி போலீஸ் பிடியில் சிக்காமல்தப்பித்து வந்தார் மீனாட்சி.

இந் நிலையில் மீனாட்சி மீதான புகார்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்ததைத்தொடர்ந்து அவரை விசாரிக்க போலீஸார் முடிவு செய்தனர். ஆனால், தன் மீதுபோலீஸார் வழக்குப் பதிவு செய்ததை அறிந்த மீனாட்சி தலைமறைவாகி விட்டார்.

அவர் அமெரிக்காவுக்கு ஓடி விட்டதாக போலீஸாருக்குத் தெரிய வந்தது.இதையடுத்து அவர் சென்னை வந்தவுடன் கைது செய்ய போலீஸார் திட்டமிட்டனர்.அதன்படி நேற்று மீனாட்சி சென்னைக்குத் திரும்பியது தெரிய வந்தது. இதையடுத்துஅவரது வீட்டுக்கு விரைந்த போலீஸார் மீனாட்சியை கைது செய்ய முயன்றனர்.

ஆனால் போலீஸாரைப் பார்த்ததும் மீனாட்சி ஆவேசமாகி, என்னைப் பிடித்தால்தற்கொலை செய்து கொள்வேன். எனது செல்வாக்கு தெரியாமல் வந்து விட்டீர்கள்என கோபமாக கத்தியுள்ளார். அப்போது மீனாட்சியின் கணவர், தனது மனைவியைகைது செய்து அழைத்துச் செல்லுங்கள் என்று போலீஸாரிடம் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து போலீஸார் மீனாட்சியை கைது செய்து மாநகர காவல்துறைஆணையர் அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர்.

தகவல் அறிந்ததும் மீனாட்சியால் ஏமாற்றப்பட்ட டிராவல் ஏஜென்சி உரிமையாளர்கள்ஆணையர் அலுவலகத்திற்கு விரைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.போலீஸார் மீனாட்சியிடம் விசாரணை நடத்தி அவர் மீது நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர்.

பின்னர் அவரை எழும்பூர் தலைமை மெட்ரோபாலிடன் நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தினர். அவரை 15 நாள் சிறையில் வைக்க நீதிபதி கணேசன் உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து சைதாப்பேட்டை கிளைச் சிறையில மீனாட்சி அடைக்கப்பட்டார்.இதற்கிடையே, மீனாட்சி போலீஸாரிடம் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் பரபரப்பானதகவல்களைத் தெரிவித்துள்ளார்.

அதில்,

எனது பூர்வீகம் ஆந்திராதான் என்றாலும் நான் சென்னையில்தான் பிறந்து வளர்ந்தேன்.1980ம் ஆண்டு எனக்குத் திருமணம் நடந்தது. 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள்வைஷ்ணவி கல்யாணமாகி தனது கணவருடன் பெங்களூரில் வசித்து வருகிறார். 2வதுமகள் வைதேகி அமெரிக்காவில் படித்து வருகிறார்.

கோடீஸ்வரர் குடும்பத்தில் பிறந்த எனக்கு சிறு வயது முதலே ஆடம்பரமாக வாழ்ந்துபழகி விட்டது. ஆடம்பரமாக செலவு செய்வது, பணத்தை தண்ணீராக செலவுசெய்வது என்று பழகி விட்டேன்.

ஆனால் கல்யாணத்திற்குப் பிறகு எனது செலவுக்கு கணவரிடமிருந்து அதிக அளவில்பணம் கிடைக்கவில்லை. இதனால் எனது பழக்க வழக்கத்தை மாற்றிக் கொள்ளமுடியாமல் சிரமப்பட்டேன்.

எனது செலவுகளுக்கு பணம் தேவை என்பதற்காக சொந்தமாக ஒரு நிறுவனத்தைத்தொடங்கினேன். ஆனால் அதில் எனக்கு பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டது. அதனால்அதை மூடி விட்டேன்.

கடன் சுமையால் ஒருபக்கம், ஆடம்பரமாக வாழ முடியவில்லையே என்ற கவலைமறுபுறமும் என்னை வாட்டியது. இந்த நேரத்தில் எனது மேனேஜராக பணியாற்றி வந்தமுரளி குறுக்கு வழி ஒன்றை எனக்குக் காட்டினார்.

பிலிப் மேத்யூ என்பவரை எனக்கு அறிமுகப்படுத்தினார். அவர் கார்களை வாடகைக்குவிடும் தொழிலில் ஈடுபட்டுள்ளார். சில தில்லுமுல்லுகளை செய்தால் பெரிய அளவில்பணம் சம்பாதிக்கலாம் என மேத்யூ யோசனை சொன்னார்.

அதாவது கார்களை வாடகைக்கு எடுத்து அவற்றை வெளி மாநிலங்களில்விற்றுவிடுவது தான் மேத்யூ கொடுத்த யோசனை. இந்த மோசடித் திட்டத்தில்என்னுடன் முரளி, மேத்யூ, சத்யநாராயணன், கலைச்செல்வி, சத்தியமூர்த்தி ஆகியோர்சேர்ந்து கொண்டனர்.

அவரவருக்குத் தெரிந்த இடங்களில் இருந்து கார்களை வாடகைக்கு எடுத்துக்கொண்டு வந்தனர். இவ்வாறு 70 கார்களை வாடக்ைகு எடுத்து அவற்றை கேரளா,கர்நாடகா, ஆந்திராவில் விற்றோம். இதன் மூலம் ரூ. 70 லட்சம் பணம் கிடைத்தது.

அதில் எனக்குப் பெரிய பங்கு கிடைத்தது. அதை வைத்து கடனை அடைத்தேன்.எனது செலவுக்கும் போதிய பணம் கிடைத்தது. இதனால் இதை தொடர்ந்து செய்யஆரம்பித்தேன்.

இப்படியாக குவாலிஸ், ஹூண்டாய், ஸ்கார்பியோ உள்ளிட்ட சொகுசு கார்களைவாடகைக்கு எடுத்து விற்று வந்தோம். எனது பெயரில் 26 வாடகைக் கார்களுக்கும்,மேத்யூ பெயரில் 26 கார்களையும் வாடகைக்கு எடுக்க ஒப்பந்தம் செய்திருந்தோம்.மற்ற கார்களை கலைச்செல்வி பெயரில் எடுத்திருந்தோம்.

இந் நிலையில்தான் எனக்கு நெருக்கடிகள் முற்றின. இதைத் தொடர்ந்து நான் கார்களைவாடகைக்கு எடுத்திருந்த சில டிராவல் ஏஜென்சி உரிமையாளர்களிடம் பணத்தைத்திருப்பித் தருவதாக ஒத்துக் கொண்டேன். அதற்கு அவர்களும் ஒப்புக் கொண்டனர்.

ஆடம்பர வாழ்க்கை வாழ நினைத்து இப்போது படு குழியில் விழுந்து விட்டேன்.நான் மோசடி செய்த பணத்தைத் திருப்பித் தந்து விடுகிறேன் என்று கூறியுள்ளார்மீனாட்சி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X