தடையை மீறி ஊர்வலம்: வைகோ கைது
சென்னை:சென்னையில் தடையை மீறி இலங்கை துணைத் தூதரகம் நோக்கி ஊர்வலம் செல்ல முயன்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.
இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதைக் கண்டித்தும், ராஜபக்ஷே இந்தியாவுக்கு வருவதைஎதிர்த்தும், இன்று சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகம் முன் மதிமுக சார்பில் வைகோதலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்த போலீசிடம் அனுமதி கோரப்பட்டது.
ஆனால் அதற்கு காவல்துறை அனுமதி மறுத்து விட்டது. இதனால் தடையை மீறி போராட்டம் நடத்தப்படும் எனமதிமுக அறிவித்துள்ளது. இந் நிலையில் இதுகுறித்து சென்னை மாநிகர காவல்துறை விடுத்த செய்திக்குறிப்பில்,
வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் சென்னை லஸ் சந்திப்பு நாகேஸ்வரராவ் பூங்கா அருகிலிருந்துஊர்வலமாக புறப்பட்டு லஸ் சர்ச் சாலை, டிடிகே சாலை வழியாக இலங்கைத் தூதரகம் சென்று அங்கு மதிமுகபொதுச் செயலாளர் வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்த மதிமுக அனுமதி கேட்டிருந்தது.
அனுமதி கேட்டகப்பட்ட பாதை மற்றும் இடம், ஊர்வலம் மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்பளிக்கப்பட்டவைஅல்ல என்பதால்தான் அனுமதி மறுக்கப்பட்டது. இலங்கைத் தமிழர் பிரச்சினை என்பதற்காக அனுமதிமறுக்கப்படவில்லை.
இருப்பினும் சென்னை மாநகரில், ஊர்வலம் செல்ல ஏற்பளிக்கப்பட்ட பாதையான சென்னை மன்ரோசிலையிலிருந்து அரசு விருந்தினர் இல்லம் வரை ஊர்வலமாக வந்து அங்கு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிகோரினால் அந்த மனு பரிசீலிக்கப்படும் என்று மதிமுகவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது.
ஆனால், இது குறித்து வைகோ கூறுகையில்,
அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதை எதிர்த்து டெல்லியில் இலங்கை தூதரகத்துக்கு அருகே போராட்டம்நடத்த அந்த மாநில போலீசார் அனுமதிக்கும்போது, சென்னையில் அனுமதி மறுப்பதா? இதனால் திட்டமிட்டபடிஅமைதியான முறையில் போராட்டம் நடந்தே தீரும் என்றார்.
தடையை மீறி ஊர்வலம்:
இந் நிலையில் இன்று காலை மைலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்காவில் இன்று மதிமுகவினர் திரண்டனர்.அங்கிருந்து இலங்கை துணைத் தூதரகம் முன்பு ஊர்வலமாக செல்ல வைகோ தலைமையில் முயன்றனர். இதைத்தொடர்ந்து அவர்களை போலீஸார் கைது செய்தனர்.
முன்னதாக மதிமுகவினர் மத்தியில் வைகோ பேசுகையில், டெல்லியில் இலங்கை தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம்நடத்த நாங்கள் திட்டமிட்டபோது அதை டெல்லி போலீஸார் தடுக்கவில்லை. ஆனால் இங்கே மிக தூரத்தில் நின்றுகொண்டு ஆர்ப்பாட்டம் செய்கிறோம் என்று சொல்லியும் திமுக அரசு அதைத் தடுத்து அனுமதி வழங்கமறுத்துள்ளது.
நாங்கள் உள்ளே போய் கலவரம் செய்யத் திட்டமிடவில்லை. எங்களது உணர்வுகளை வெளிப்படுத்தவே இந்தஆர்ப்பாட்டம். ஆனால் அதற்குக் கூட இந்த அரசில் அனுமதி இல்லை என்றார்.
கைது செய்யப்பட்ட வைகோ உள்ளிட்ட அனைவரும் அதே பகுதியில் உள்ள கல்யாண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கை அதிபர் ராஜபக்ஷே இந்தியா வருவதை எதிர்த்து வரும் 27ம் தேதிடெல்லியில் வைகோ உண்ணாவிரதப் போராட்டம் நடத்தவுள்ளார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications