For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தெ.ஆப்பிரிக்காவிடம் இந்தியா கேவல தோல்வி

By Staff
Google Oneindia Tamil News

டர்பன்:தென் ஆப்பிரிக்காவும், இந்தியாவும் மோதிய 2வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில்,தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 91 ரன்களில் சுருண்டு, 157ரன்கள் வித்தியாசத்தில் கேவலமான தோல்வியை சந்தித்தது இந்தியா.

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது.இரு அணிகளுக்கும் இடையே தற்போது ஒரு நாள் போட்டித் தொடர்தொடங்கியுள்ளது.

முதல் ஒரு நாள் போட்டி ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெறுவதாக இருந்தது.ஆனால் மழை காரணமாக அப்போட்டி கைவிடப்பட்டது. இந் நிலையில் டர்பன்நகரில் 2வது ஒரு நாள் போட்டி நடந்தது.

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய தொடக்கப்பந்து வீச்சாளர்கள் ஆரம்பத்தில் சிறப்பாக பந்து வீசியதால் தென் ஆப்பிரிக்க வீரர்கள்ரன் சேர்க்க சற்றே சிரமப்பட்டனர். 63 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை தென்ஆப்பிரிக்கா இழந்தது. கேப்டன் ஸ்மித் 1 ரன்னுடனும், கிப்ஸ் 2 ரன்களுடனும்ஆட்டமிழந்தனர்.

அடித்து ஆட முயன்ற போஸ்மன் 22 ரன்களில் பெவிலியன் திரும்பினார். முன்னணிவீர்ரகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும் கூட ஆல்ரவுண்டர் ஜேக் கல்லிஸ்நங்கூரம் போல நின்று அணியின் ஸ்கோரை வலுவாக உயர்த்த உதவினார்.

நிதானமாக ஆடி வந்த அவர் அவ்வப்போது இந்தியப் பந்து வீச்சாளர்களை பதம்பார்த்தார். அவருக்கு துணையாக டிவில்லியர்ஸ் சிறப்பாக ஆடி ரன் குவிப்பைவேகப்படுத்தினார். இருவரும் சேர்ந்து 78 ரன்களை சேர்த்தனர்.

அதேபோல மார்க் பெளச்சருடனும் இணைந்து சிறப்பாக ஆடினார் கல்லிஸ். இறுதிவரை ஆட்டமிழக்காத கல்லிஸ் சிறப்பாக ஆடி 119 ரன்களை குவித்தார். அவரதுசெஞ்சுரியால் தென் ஆப்பிரிக்கா ஆட்ட இறுதியில் 8 விக்கெட் இழப்புக்கு 248ரன்களை எடுத்தது.

இந்திய அணித் தரப்பில் முனாப் படேல், ஜாகிர்கான், அகர்கர் ஆகியோர் சிறப்பாகபந்து வீசி தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஹர்பஜன் சிங் ரன்களை சும்மா கூடைகூடையாக அள்ளிக் கொடுத்து விக்கெட் ஏதும் எடுக்காமல் இந்திய அணியைஏமாற்றினார்.

பின்னர் 249 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், தென் ஆப்பிரிக்கபந்துவீச்சை சந்தித்தது இந்தியா. எடுத்த எடுப்பிலேயே இந்தியாவுக்கு அதிர்ச்சிகொடுத்தார் ஷான் போலாக்.

தொடக்க ஆட்டக்காரரான வாசிம் ஜாபர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

அதன் பின்னர் டெண்டுல்கரும், முகம்மது கைபும் சேர்ந்து கொஞ்ச நேரம் தாக்குப்பிடித்து ஆடினர். தென் ஆப்பிரிக்க அணியின் வேகப் பந்துவீச்சு படு அனலாகஇருந்ததால் அதை சமாளிக்க முடியாமல் இந்திய வீரர்கள் திணறினர்.

கைப் 8 ரன்களில் பெவிலியன் திரும்பி வந்தார். கேப்டன் டிராவிட் நிலைத்து ஆடிஅணியைக் காப்பாற்றுவார் என நினைத்தபோது, 18 ரன்களில் திரும்பினார். மறுமுனையில் படு நிதானமாக ஆடி வந்தார் சச்சின்.

ஆனால் வேகப்பந்து வீச்சாளர் நெல், சச்சினை எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆக்கிஇந்திய அணியின் தோல்விக்கு பிள்ளையார் சுழி போட்டு வைத்தார். 35 ரன்கள்எடுத்த சச்சின் படு ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார்.

அதன் பின்னர் வந்த யாருமே ஒழுங்காக ஆடவில்லை. வேகப்பந்து வீச்சை தூள்தூளாக்கி நொறுக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட டோணி 14 ரன்கள் மட்டுமே சேர்த்துதிரும்பினார். இதேபோல ரெய்னா 4 ரன்களுடனும், மோங்கிய 1 ரன்னிலும்ஆட்டமிழந்தனர்.

அகர்கர் மட்டும் பொறுப்புடன் ஆடி 6 ரன்களை சேர்த்தார்!!!.

இறுதியில், 29.1 ஓவர்களிலேயே இந்திய அணி அத்தனை விக்கெட்டுகளையும்இழந்து 91 ரன்களில் சுருண்டு, 157 ரன்கள் வித்தியாசத்தில் படு மோசமானதோல்வியை சந்தித்தது.

இந்தியாவுக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா பெற்ற மிகப் பெரிய வெற்றி இது தான்.இதற்கு முன்பு ஷார்ஜாவில் 1995ம் ஆண்டு நடந்த ஒரு நாள் போட்டியில் 80ரன்களில் இந்தியாவை வீழ்த்தியதே, தென் ஆப்பிரிக்க அணியின் மிகப் பெரியவெற்றியாக இருந்தது.

இந்தப் போட்டியில் முன்னணி வீரரான ஷோவாக் விளையாடவில்லை. பயிற்சிஆட்டத்தின்போது அவரது விரலில் காயம் ஏற்பட்டதால் ஓய்வில் இருந்து வரும்ஷேவாக், முன்னெச்சரிக்கையாக இப்போட்டியில் இடம் பெறவில்லை அணிமேலாளர் ராஜன் நாயர் தெரிவித்தார்.

நட்சத்திர வீரர் சச்சின், பொறுப்பான வீரர் டிராவிட், அதிரடி வீரர் டோணி,நெருக்கடி நிலையில் மீட்கும் வீரர் கைப் என ஏகப்பட்ட பட்டங்களுடன் முன்னணிவீரர்கள் இருந்தும் இந்தியாவால் 100 ரன்களைக் கூட எட்ட முடியாமல் பரிதாபமானதோல்வியை சந்தித்துள்ளது கிரிக்கெட் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.

போய் காசு வாங்கிட்டு பெப்சிக்கு போஸ் குடுங்கப்பா....

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X