ஆஸ்திரேலியா, நியூசிலாந்து இணையுமா?
கான்பெர்ரா:ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் தங்களது கருத்து வேறுபாடுகளை களைந்து ஒரே நாடாக இணைய வேண்டும்என்ற கோரிக்கை வலுவடைந்து வருகிறது.
![]() |
உலக வரலாற்றில் புதிய நாடுகள் உருவாவதும், பல நாடுகள் உடைவதும், ஒரு கட்டத்தில் மீண்டும் இணைவதும்அவ்வப்போது நடந்து வருகின்றன. உலகப் போரின் போது மேற்கு ஜெர்மனி, கிழக்கு ஜெர்மனி என இரண்டாகப்பிரிந்த ஜெர்மனி தற்போது ஒரே நாடாக மாறியுள்ளது.
அதேபோல, இங்கிலாந்து வசம் இருந்த ஹாங்காங் தற்போது மீண்டும் சீனாவிடமே வந்துள்ளது.
பரம்பரை எதிரிகளாக தங்களைப்பார்த்துக் கொள்ளும், இந்தியா, பாகிஸ்தான் இணைய வேண்டும் என்று கூடகொஞ்ச காலத்திற்கு முன்பு குரல்கள் எழுந்தன. இந்த வரிசையில் இப்போது ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும்இணைய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் இங்கிலாந்து காலணி ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகள். இரு நாடுகளும்இணைந்து ஆஸ்திரலேசியா எனப்படுகிறது. 1901ம் ஆண்டு இங்கிலாந்திடமிருந்து ஆஸ்திரேலியா சுதந்திரம்பெற்றது. அப்போது ஆஸ்திரேலியாவுடன் நியூசிலாந்து இணையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால்ஆஸ்திரேலியாவுடன் இணைய மாட்டோம் என நியூசிலாந்து அறிவித்ததால் தனி நாடாகவே நீடித்தது.
இந்த நிலையில் இரு நாடுகளும் ஒன்றாக இணைவது குறித்து சட்டப்பூர்வமாக பரிசீலிக்க வேண்டும் எனஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் குழு ஒன்று கோரிக்கை விடுத்துள்ளது.
ஆனால் இந்தக் கோரிக்கையை நியூசிலாந்து பிரதமர் ஹெலன் கிளார்க் நிராகரித்துள்ளார். இணைவதாகஇருந்தால் 105 ஆண்டுகளுக்கு முன்பே அதை செய்திருப்போம். இப்போது இணைப்பு என்ற பேச்சுக்கேஇடமில்லை என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் 2 கோடி பேர் உள்ளனர். நியூசிலாந்து மக்கள் தொகை 40 லட்சம் ஆகும். ஆஸ்திரேலியாவும்,நியூசிலாந்தும் பொருளாதார ரீதியில் நல்ல தொடர்புகளை கொண்டுள்ளன. இரு நாட்டு மக்களும் விசா எதுவும்இல்லாமல் இரு நாடுகளுக்கும் போய் வந்து கொண்டுள்ளனர்.
இப்படிப்பட்ட நிலையில் இரு நாடுகளும் இணைய வேண்டும் என்ற கோரிக்கை அவ்வப்போது எழுந்துவருகிறது. ஆஸ்திரேலியாவில் இதற்கு விருப்பம் காணப்பட்டாலும் நியூசிலாந்து இணைப்பை விரும்பவில்லை.
இணைப்பு குறித்த பரிந்துரையை முன் வைத்த வழக்கறிஞர்கள் குழுவின் தலைவரான பீட்டர் ஸ்லிப்பர்கூறுகையில், எதிர்காலத்தில் இரு நாடுகளும் இணைவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆராய இந்தகமிட்டியை ஆஸ்திரேலிய அரசு நியமித்தது. இதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக நாங்கள்பரிந்துரைத்துள்ளோம். அதேசமயம் இது எளிதான ஒன்று அல்ல என்பதையும் விளக்கியுள்ளோம் என்றார்.













Click it and Unblock the Notifications