சித்தராமையா வெற்றி: கெளடாவுக்கு பாடம்
மைசூர்:மைசூர் சாமுண்டீஸ்வரி சட்டமன்றத் தொகுதிக்கு நடந்த இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சித்தராமையா257 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
பெருமளவில் பணபலம், ஆட்சி அதிகார துஷ்பிரயோகம் செய்தும் ஆளும் பாஜக-மதசார்பற்ற ஜனதா தளகூட்டணிக்கு தோல்வியே கிடைத்துள்ளது.
2004ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் சாமுண்டீஸ்வரி தொகுதியில் தேவே கெளடாவின் மதசார்பற்றஜனதாதளம் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வென்றார் சித்தராமையா. இதையடுத்து அமைந்தகாங்கிரஸ்-ஜனதா தளம் கூட்டணி அரசில் துணை முதல்வராக பொறுப்பேற்றார்.
ஆனால், பாஜகவுடன் கூட்டணி அமைத்து தனது மகன் குமாரசாமியை முதல்வராக்க தேவே கெளடாமுயன்றபோது எதிர்ப்புத் தெரிவித்தார் சித்தராமையா. இதனால் அவரை கட்சியில் இருந்து நீக்கினார் கெளடா.இதைத் தொடர்ந்து காங்கரஸ் கட்சியில் இணைந்த சித்தராமையா தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
இதனால் சாமுண்டீஸ்வரி தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந் தேர்தலில் 14 பேர்போட்டியிட்டனர். இதில் காங்கிரஸ் வோட்பாளர் சித்தராமையா, மதசார்பற்ற ஜனதாதளம் வேட்பாளர்சிவபசப்பவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.
இத் தொகுதியில் பாஜகவும் போட்டியிட திட்டமிட்டது. இதனால் கெளடா-பாஜக இடையே மோதல் ஏற்பட்டது.இறுதியில் தொகுதியை கெளடா கட்சிக்கு பாஜக விட்டுத் தந்தது.
இந்த இடைத் தேர்தலின் முடிவு பாஜக-கெளடா கூட்டணியின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தேர்தல் என்பதால்ஏகத்துக்கும் பணத்தை வாரிவிட்டார் குமாரசாமி. கோடிக்கணக்கில் பணமும், மதுவும் விளையாடின.
அரசு இயந்திர துஷ்பிரயோகமும், தமிழக ஸ்டைலில் டிபன் கேரியர், சைக்கிள், ஓட்டுக்கு 1000 ரூபாய் எனகுமாரசாமி புகுந்து விளையாடினார்.
இதனால் தேர்தல் கமிஷனின் கண்டனத்துக்கும் ஆளானார் முதல்வர் குமாரசாமி.
கடும் போட்டிய நிலவிய சூழலில் 257 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக-கெளடா, குமாரசாமி கூட்டணியைவீழ்த்தியுள்ளார் சித்தராமையா. இதனால் இந்தக் கூட்டணியில் விரைவிலேயே விரிசல்கள் ஆரம்பமாகும் என்றுதெரிகிறது.












Click it and Unblock the Notifications