ஒன் இந்தியா- குருஜி.காமின் தேடல் கூட்டணி

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:சீகூயோயா கேபிடல் இந்தியா நிறுவனத்தின் முதலீட்டி உருவாகியுள்ளது இந்தியாவின் முதல் உள்நாட்டுஇன்டர்நெட் சர்ச் என்ஜினான குருஜி டாட் காம்.

நம் நாட்டு இணையத் தளங்களில் தேடலுக்கு உதவும் வலைத் தளம் இது.

இந்த தேடல் தளத்துடன் இணைந்து செயல்படவுள்ளது இந்தியாவின் முன்னணி இணையத் தளமான ஒன்இந்தியா.

மாதந்தோறும் 70 மில்லியன் பேஜ் வியூக்கள் கொண்ட ஒன் இந்தியா இணையத் தளங்களைபயன்படுத்துவோருக்கு இந்த சர்ஜ் என்ஜின் மிகப் பெரிய உதவியாய் இருக்கும்.

அனுராக் டோக்:

இது குறித்து குருஜி டாட்.காமின் கோ-பெளன்டரும் தலைமை செயல் அதிகாரியுமான அனுராக் டோக்கூறுகையில்,

ஒரு மாற்றான சர்ச் என்ஜினாக குருஜி டாம் காம் மாறி வருவதையே ஒன் இந்தியாவுடனான எங்கள் கூட்டணிவெளிப்படுத்துகிறது. ஒன் இந்தியாவின் லட்சக்கணக்கான வாசகர்களுக்கு எங்கள் சர்ச் என்ஜினின் மேம்பட்டசேவையை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம். ஒன் இந்தியாவுடனான இந்த கூட்டு முயற்சி மூலம் எங்கள்தேடல் தளம் ஏராளமானவர்களை சென்றடையும். இந்தியா என்றால் குருஜி என்ற நிலையை நாங்கள் அடைய,நாங்கள் மேற்கொண்டுள்ள இந்தப் பயணத்தின முக்கிய மைல் கல்லாக இந்த கூட்டு முயற்சி அமையும் என்றார்.

பி.ஜி.மகேஷ்:

ஒன் இந்தியா இணையத் தளங்களின் தலைமை செயல் அதிகாரி பி.ஜி.மகேஷ் கூறுகையில்,

தொழில்நுட்பரீதியில் மிக நுணுக்கமான இந்த சர்ச் என்ஜின் இந்திய வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த தேடல்உதவியை செய்யும். நாங்கள் உலக அளவில் முன்னணி சர்ச் என்ஜின்களை எல்லாம் ஆய்வு செய்துவிட்டுத் தான்இறுதியில் குருஜியிடம் கைகோர்க்க முடிவு செய்தோம். காரணம், குருஜி தேடல் தளத்தின் மேம்பட்டதொழில்நுட்பமும், சிறந்த சேவை வழங்க வேண்டும் என்பதில் அவர்களுக்கு இருக்கும் தாகமும் தான்.

தேடல் என்பது இன்டர்நெட்டின் மிக முக்கிய அம்சமாகிவிட்ட நிலையில் இந்த இளமையான சுறுசுறுப்பானநிறுவனத்துடன் கைகோர்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என்றார்.

குருஜி டாட்.காம்:

குருஜி டாட் காம், இந்தியாவின் முதல் சர்ச் என்ஜினாகும். டெல்லியைச் சேர்ந்த இரு ஐஐடி பட்டதாரிகள்உருவாக்கிய இந்த தேடல் தளம், இன்டர்நெட்டில் இந்திய கண்டென்டைத் தேடிப் பிடிக்க மிக நுட்பமான தேடல்தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது.

மிக நுணுக்கமான அலாக்ரிதம் கொண்ட கம்ப்யூட்டிங் சிஸ்டம் மூலம் இந்திய இணையத் தளங்களை மட்டும்பிரித்து அடையாளம் காண்கிறது குருஜி.

இந்திய இணையத் தளங்களை பிரித்து, சலித்து, வாசகர்கள் தேடும் விஷயத்தை மட்டும் மிகத் தெளிவாக,விரைவாக கொண்டு வந்து கொட்டுகிறது, குருஜி.

இந்த இணையத் தளம் குறித்து மேலும் அறிய அணுகவும், www.guruji.com

ஒன் இந்தியா:

ஒன் இந்தியா, இந்தியாவின் முன்னணி இணையத் தளம். செய்திகள், பொழுதுபோக்கு அம்சங்கள், வர்த்தகம், ஷாப்பிங் அனுபவம் அனைத்தையும் ஒரே குடையின்கீழ் தரும் தளம்.

ஒரு நாளைக்கு 1,000க்கும் மேற்பட்ட செய்திகள் ஒன் இந்தியா இணையத் தளங்களில் வெளியிடப்படுகின்றன.

ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ் (தட்ஸ்தமிழ்), மலையாளம், தெலுங்கு, கன்னடத்திலும் முன்னணி தளங்களை கொண்ட ஒன் இந்தியா இணையத் தளத்தில் வரி விளம்பரம்(க்ளிக்.இன்), கிரிக்கெட் (தட்ஸ்கிரிக்கெட்) ஆகியவற்றுக்கும் தனி தளங்கள் உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+