ராஜ்யசபா-ஆங்கிலத்துக்கு தடை போட யோசனை
டெல்லி:ராஜ்யசபாவில் ஆங்கிலத்துக்கு தடை விதிக்கலாம் என சில பாஜக, காங்கிரஸ் எம்பிக்கள் யோசனைகூறியுள்ளனர்.
ஆங்கில மோகத்தால் நமது கலாச்சாரம் சீரழிந்துவிட்டதாக பாஜக உறுப்பினர் ஒருவர் ராஜ்யசபாவில் எழுப்பியபிரச்சனைக்கு மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர் அம்பிகா சோனி பதிலளிக்கையில்,
ஆங்கிலத்தை ஒரு போதனை மொழியாக மாற்றியதால் நமது நாட்டின் பாரம்பரியம், கலாச்சாரம், பழங்குடியினமக்களின் கலாச்சாரம் சீரழிந்து போய் விட்டதாக கூற முடியாது. அதற்கான எந்த ஆதாரமும் இல்லை.
இதுதொடர்பாக குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கும் ஆய்வுப்பூர்வமான முடிவுகளும் இதுவரை இல்லை. பல்வேறுநிகழ்ச்சிகள் மூலம் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் குறித்து பள்ளிகளில் சொல்லிக் கொடுக்கப்படுகிறது என்றார்.
அப்போது காங்கிரஸ் உறுப்பினர் சத்யவிரத் சதுர்வேதி எழுந்து, பாஜக உறுப்பினர் ஆங்கிலம் மோசமானவிளைவை ஏற்படுத்துகிறது என்று நினைத்தால் முதலில் இந்த அவையில் ஆங்கிலத்தை தடை செய்ய வேண்டும்என்றார்.
சதுர்வேதியின் கருத்து குறித்து அவைத் தலைவர் பைரான் சிங் ஷெகாவத்திடம் சில பாஜக உறுப்பினர்கள்கேட்டபோது, அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக தீர்மானித்தால் இதுதொடர்பாக தீர்மானம் கூட கொண்டுவரலாம் என்றார்.
அப்போது பேசிய அம்பிகா சோனி, கலாச்சாரமும், பாரம்பரியமும் வீட்டிலிருந்து வர வேண்டும். வீட்டில்குழந்தைகளுக்கு பெற்றோர் என்ன சொல்லிக் கொடுக்கிறார்களோ அதைத்தான் குழந்தைகள் கற்றுக் கொள்ளும்என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், பள்ளிக் கூடங்களில் மும்மொழித் திட்டத்தை நாடு ஏற்றுக்கொண்டு அதைஅமல்படுத்தி வருகிறது. அதன்படி தங்களது தாய்மொழியிலும் மாணவர்கள் கல்வி கற்று வருகிறார்கள். நாட்டின்கலாச்சாரம் குறித்த தகவல்களை பாடங்களில் அதிகம் இடம் பெறச் செய்ய கூடுதல் கவனம் எடுத்துக்கொள்ளப்படும் என்றார்.
ஆங்கிலத்தை தடை செய்வது என்பதெல்லாம் சரியான வாதம் இல்லை. வட கிழக்கு மாநிலங்களில்பெரும்பாலான பள்ளிகளில் போதனை மொழியே ஆங்கிலமாகத் தான் உள்ளது என்பதை மனதில் கொள்ளவேண்டும் என்றார்.
இந்தியை தூக்கிவிடும் முயற்சிகளின் ஒரு பகுதியாகவே ஆங்கிலத்துக்கு தடை வேண்டும் என அந்த வட இந்தியஎம்பிக்கள் சவுண்டு விட்டதாகத் தெரிகிறது. துணைக்கு காலச்சாரத்தையும் கூப்பிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications