மு.மேத்தாவுக்கு சாகித்ய அகாடமி விருது
டெல்லி:தமிழகத்தைச் சேர்ந்த கவிஞர் மு.மேத்தா உள்பட 23 பேருக்கு இந்த ஆண்டுக்கானசாகித்ய அகாடமி விருது வழங்கப்படுகிறது.
![]() |
தேசிய அளவில் சிறந்த இலக்கிய படைப்புகளுக்காக சாகித்ய அகடமி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழில்ஆகாயத்தில் அடுத்த வீடு என்ற மேத்தாவின் கவிதைப் படைப்புக்காக இந்த விருதுகிடைத்துள்ளது. டெல்லியில் பிப்ரவரி 20ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில்மேத்தாவுக்கு ரூ. 50,000 ரொக்கப் பரிசும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.
எண்ணற்ற கவிதைகளைப் படைத்துள்ள முகம்மது மேத்தா, 1970களில் புதுக்கவிதைகளுக்கு வடிவம் கொடுத்தவர். நவீன கவிதைகளை பிரபலப்படுத்தியவர்களின்முக்கியமானவர்.
30க்கும் மேற்பட்ட கவிதை தொகுப்புகள், கட்டுரைகள், சிறுகதைகள், நாவல்களைவெளியிட்டுள்ளார். சுமார் 400 திரைப்பட பாடல்களையும் எழுதியுள்ளார். தமிழகஅரசின் பாரதிதாசன் விருதை வென்றவர். சென்னை பிரசிடென்சி கல்லூரியில் 35ஆண்டுகள் பேராசிரியராக இருந்தவர் மேத்தா.
டோக்ரி மொழியில் சிறந்த இலக்கிய நூலை வெளியிட்டதற்காக தர்ஷன் தர்ஷி, கியானேந் திரிபாதி (இந்தி), ஷபிசெளக்(காஷ்மீரி), பன்சிதர் சாரங்கி (ஒரியா), ஹர்ஷாதேவ் மாதவ் (சமஸ்கிருதம்), மஹ்மூத் சயீதி (உருது) உட்பட மொத்தம் 23பேர் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஆனால், ஆங்கில இலக்கியத்துக்கான விருது இந்த ஆண்டு வழங்கப்படவில்லை. காரணம், இந்த ஆண்டு ஆங்கிலஇலக்கியத்துக்கான விருது தொடர்பான கூட்டம் நடைபெறவில்லையாம் (ரொம்ப சுத்தம்). இத் தகவலை சாகித்ய அகாடெமிசெயலாளர் அக்ரஹார கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.