For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரயில்களில் ஏசி கட்டணம் 15% அதிகரிக்கிறது

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:ரயில்களில் முதல் வகுப்பு ஏசி வகுப்பு கட்டணத்தை 15 சதவீதம் அதிகரிக்க ரயில்வேஅமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு வரும் பிப்ரவரியில் ரயில்வேபட்ஜெட்டில் வெளியாகிறது.

அதே நேரத்தில் இரண்டாம் வகுப்பு மற்றும் ஏழைகள் ரதம் ஏசி ரயில்களின்கட்டணத்தில் எந்த மாற்றமும் இருக்காது.

கடந்த ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் குறைந்த கட்டண விமான நிறுவனங்களுடன்போட்டி போடும் வகையில், ஏசி முதல் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு ஏசிகட்டணங்கள் 10 முதல் 18 சதவீதம் வரை குறைக்கப்பட்டன.

ஆனால், ரயில்வே செலவினங்கள் அதிகரித்து வரும் நிலையில் வரும் பட்ஜெட்டில்ஏசி முதல் வகுப்பு கட்டணம் 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை உயரும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த கட்டணம்உயர்த்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் இப்போது ஏழைகள் ரதம் ரயில்களைத் தவிர பிற அனைத்துரயில்களிலும் ஏசி வகுப்பு கட்டணங்கள் உயர்த்தப்படலாம் எனத் தெரிகிறது.

இந்த கட்டண உயர்வினால் கிடைக்கும் கூடுதல் வருமானத்தை கொண்டு ரயில்நிலையங்களை நவீனப்படுத்தவும், பயணிகளுக்கு புதிய சேவைகள் அளிக்கவும்,உணவின் தரத்தை உயர்த்தவும் ரயில்வே அமைச்சர் லாலு திட்டமிட்டுள்ளார்.

மேலும் சதாப்தி, ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில்களின் பெட்டிகளில் செய்யப்பட்டுள்ளஉள் அலங்காரம் போலவே கரீப் ரத் எனப்படும் ஏழைகள் ரயில்களையும்அழகுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஏசி வகுப்பு கட்டணங்கள் உயர்ந்தாலும் அந்த அளவுக்கு பயணிகளுக்கு வசதிகளும்மேம்படுத்தப்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X