For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

புஸ் ஆன மாஜிகளின் பாணங்கள்-வைகோ

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:தாயகத்தை கைப்பற்றுவதை ஏற்க முடியாது என சோனியா அவசர எச்சரிக்கை விடுத்ததால் தான் கட்சியும் என் உயிரும் தப்பின என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

இது குறித்து வைகோ கூறுகையில்,

எங்கள் கட்சியின் தலைமை அலுவலகத்தை ரத்தக் களறி ஏற்படுத்தி கைப்பற்ற திட்டம் தீட்டப்பட்டிருந்தது. மாநகராட்சித் தேர்தலில் குண்டர்களை ஏவிவிட்டது போல தாயகத்தையும் ரெளடிகளை விட்டு கைப்பற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக எனக்கு தகவல் வந்தது.

Vaikoரத்தக் களறி ஏற்பட்டால் சிந்தப்படும் முதல் சொட்டு ரத்தம் என் குடும்ப ரத்தமாக இருக்க வேண்டும் என்று நினைத்தேன். இதனால் தான் 2 முறைமட்டுமே இதுவரை தாயகத்துக்கு வந்திருந்த என் மகன் துரை வையாபுரியை முதல் ஆளாக தொண்டர்களோடு தொண்டராக உட்கார வைத்தேன்.

அவரோடு என் குடும்ப உறுப்பினர்களும் வந்து உட்கார்ந்தார்கள். மற்ற கட்சிகளில் பதவி சுகத்துக்காக வாரிசுகளை கட்சி அலுவலகத்துக்குகொண்டு வந்தார்கள். நான் ரத்தம் சிந்த அழைத்து வந்தேன். என் தொண்டர்களையும் கட்சியையும் நான் என் குடும்பத்துக்கு மேலாக மதிக்கிறேன்.இதைத் தான் குடும்ப அரசியல் என்கிறார் செஞ்சியார்.

மதிமுக கட்சி அலுவலகத்தை கைப்பற்றவும் கட்சியை உடைக்கவும் நடக்கும் முயற்சிகள் குறித்து பிரதமருக்கும் சோனியா அம்மையாருக்கும் கடிதம்எழுதினேன். நான் அனுப்பிய கடிதம் கிடைத்தபோது பிரதமர் கொல்கத்தாவில் ஒரு விழாவில் இருந்தார். இருந்தாலும் கடிதததை படித்தார்.

அதே போல சோனியாவும் படித்ததாக எனக்கு தகவல் வந்தது. இருவரிடம் இருந்து வந்த தகவலில் கட்சியை உடைப்பது, அலுவலகத்தை கைப்பற்றுவதுஅநாகரீகச் செயல், பொறுத்துக் கொள்ள முடியாது என இருவரும் குறிப்பிட்டிருந்தனர்.

அதே போல எனக்கு எதிரானவர்களுக்கும் (திமுக?) சோனியா அவசர எச்சரிக்கை விடுத்தார். இதனால் என் கட்சி அலுவலகம் மீதும் என் மீதும்நடக்க இருந்த குண்டர் படை தாக்குதல் தவிர்க்கப்பட்டு, கட்சியும் என் உயிரும் தப்பின.

இந்த பிரச்சனை குறித்து ஜெயலலிதாவும் அக்கறையுடன் பேசினார். பல விஷயங்களை என்னோடு பகிர்ந்து கொண்டார்.

எ.ஜியும் செஞ்சியும் மந்திரி பதவி கேட்டு தொல்லை தந்ததால் பிரதமரிடம் பேசினேன். ஆனால், மதிமுக எம்பிக்களையும் கணக்கில் காட்டித் தான் திமுகஅமைச்சர் பதவிகளைப் பிடித்ததாக சோனியாவும் பிரதமரும் கூறிவிட்டனர்.

கடந்த 27ம் தேதி சிஐடி நகரில் உள்ள கருணாநிதியின் வீட்டுக்கு எல்.ஜியும் செஞ்சியும் சென்றனர். அதன் பிறகே பல திட்டங்கள் போடப்பட்டன.

சேலத்தில் எல்.ஜியும் செஞ்சியும் நடத்தப் போகும் கூட்டம் வெறும் சாதாரணக் கூட்டமாகத் தான் இருக்கும். திமுகவின் ஏற்பாட்டில் நடக்கும் ஒருகூட்டம் அது. அந்த அற்பக் கூட்டத்துக்கு மதிமுக பொதுக் குழுக் கூட்டம் என்று பெயர் சூட்டுவது வெட்கக்கேடு என்றார் வைகோ.மாஜிக்களின் புஸ்வானங்கள்:

இந் நிலையில் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

1993ம் ஆண்டு திமுகவில் குழப்பம் விளைவித்து அண்ணா உருவாக்கிய இயக்கத்தை நான் சீர்குலைக்க முயன்றதாக முதல்வர் கருணாநிதி பழி சுமத்தியுள்ளார்.

கொலையிலும் கொடிய பழி என் மீது சுமத்தப்பட்டதைத் தாங்க முடியாமல் தான் திமுகவினர் 5 பேர் தீக்குளித்து மடிந்தனர். என் மீது பழி சுமத்தி, என் பொதுவாழ்வுக்கு களங்கம் சுமத்தியதைக் கூட சகிக்கலாம். ஆனால், தமிழ் ஈழ மக்களை காக்கவும் உரிமை பெறவும் உயிர்த் தியாகம் செய்து போராடிவரும் புலிகள் மீது கருணாநிதியைக் கொலை செய்ய திட்டமிட்டதாக பழி சுமத்தியது தான் கொடுமையிலும் கொடுமை.

2006ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் முடிந்தவுடன் என் வீட்டுக்குள் நுழைந்து என்னைத் தாக்கவும் கலவரம் செய்ய திட்டமிடப்பட்டது. என் உயிருக்குஆபத்து ஏற்படக் கூடும் என்ற சூழலில் பிரதமரிடம் அதிமுக, மதிமுக எம்பிக்கள் நேரில் மனு கொடுத்தனர்.

இதனால் என் மீது ஒரு கொடூரமான புகாரை தயார் செய்து திமுக எம்பிக்கள் மூலம் பிரதமரிடம் தரச் செய்தார்கள். அதில் 93ம் ஆண்டிலேயே புலிகளைக்கொண்டு கருணாநிதியைக் கொலை செய்ய முயன்றவன் வைகோ, இப்போதும் வைகோவுக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு உண்டு, கருணாநிதியின் பேரனானதயாநிதி மாறனுக்கு வைகோவால் ஆபத்து என்றும், இதனால் வைகோவின் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும் என்றனர்.

எல்.கணேசன், கடந்த 14ம் தேதி நாடாளுமன்றத்தில் கருணாநிதியை பாராட்டி பேசியதால் எனக்கு கோபம் என்கிறார்கள். அதை நான்பொருட்படுத்தவே இல்லை. ஏனென்றால் சட்டமன்ற தேர்தல் முடிந்த உடனே எல்ஜியும் செஞ்சியும் திமுக வலையில் விழுந்துவிட்டனர். மதிமுகவை வீழ்த்தசூழ்ச்சிப் படலத்தையும் தொடங்கிவிட்டனர்.

சேலத்தில் இந்த மாஜிக்கள் இருவரும் கூட்டியிருக்கும் கூ"டடத்துக்கு ஆள் பிடிக்கும் வேலை நடந்து வருகிறது. ஒவ்வொரு பொதுக் குழு உறுப்பினரிடமும் 2லட்சம் தருகிறோம், 5 லட்சம் தருகிறோம், அரசு காண்ட்ராக்ட்கள் தருகிறோம் என பேரம் பேசுகின்றனர்.

சேலம் கூட்டத்தில் திமுகவினரையே பெருமளவில் கலந்து கொள்ளச் செய்து பெரும்பான்மையான பொதுக் குழு உறுப்பினர்கள் இந்த மாஜிக்கள் பக்கம்இருப்பதாக அறிவித்து அதற்கு அடுத்த கட்டமாக மீண்டும் தாயகத்துக்குள் நுளைய முயற்சி செய்கிறார்கள்.

93ல் நாங்கள் தான் உண்மையான திமுக என நான் போராடியது உண்மை. ஆனால், அறிவாலயத்தை கைப்பற்ற திட்டமிட்டதும் இல்லை அந்த முயற்சியைசெய்ததும் இல்லை. கோடிகள் உங்களோடு இருக்கட்டும், கொள்கை எங்களோடு இருக்கட்டும் என்று தான் சொன்னேன்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என ஆணித்தரமாக வாதாடியவர் எல்.கணேசன். அதை மறுக்காமல்உடன்பட்டவர் தான் இந்த செஞ்சி ராமச்சந்திரன்.

இந்த இருவரும் இப்போது ஏவிவிடும் பாணங்கள் எல்லாம் வெறும் புஸ்வானங்கள் தான் என்று கூறியுள்ளார் வைகோ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X