For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியா ஏமாற்றம்: கட்சிகள் கண்டனம்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:சதாம் உசேன் தூக்கிலிடப்பட்ட செயல் இந்தியாவுக்கு கடும் ஏமாற்றத்தைக்கொடுத்திருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜிதெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சதாம் உசேனுக்கு தூக்குத்தண்டனையை நிறைவேற்றக் கூடாது என இந்தியா கோரியிருந்தது. தூக்குத் தண்டனைநிறைவேற்றப்படாது என நம்பிக் கொண்டிருந்த நிலையில் சதாம் தூக்கிலிடப்பட்டதுபெரும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

சதாமைத் தூக்கிலிட்டதால், ஈராக்கில் தற்போது நடந்து வரும் மறு சீரமைப்பு, சமாதானமுயற்சிகள் பாதிக்கப்படாது என நம்புகிறோம் என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில், ஈராக்கில் இன்னும்பிரச்சினைகள் பெரிதாகும். ஈராக்கின் சாதாரண குடிமக்களின் மனதை அங்கு தற்போதுஉள்ள அரசு வெல்லவில்லை. அதைத்தான் சதாம் உசேனின் ரகசிய தூக்குத் தண்டனைநிரூபித்துள்ளது.

திணிக்கப்பட்ட வெற்றியின் மூலம் ஈராக்கில் அமைதி, நீதியை நிலை நாட்ட முடியாதுஎன்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலோத்பல் பாசு கூறுகையில், சதாமை அவசரஅவசரமாக தூக்கிலிட்டிருப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. இந்ததண்டனையை மிகக் கடுமையாக அனைவரும் கண்டிக்க வேண்டும்.

சதாமின் படுகொலை ஈராக்கில் மட்டுமல்லாது, உலகின் பல்வேறு பகுதிகளிலும்பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்றார்.

முன்னாள் வெளியுறவு அமைச்சர் நட்வர்சிங் கூறுகையில், மேற்கு ஆசியாவில் பதட்டநிலை மேலும் அதிகரிக்கும் என்றார்.

முன்னாள் இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் ஜி.பார்த்தசாரதி கூறுகையில்,ஈராக்கில் தற்போது நடந்துவரும் உள்நாட்டுப் போர் மேலும் மோசமடையும். ஷியாபிரிவினருக்கும், சன்னி பிரிவினருக்குமான மோதல் மேலும் அதிகரிக்கும்.

இனிமேல் இந்த இரு பிரிவினரும் எப்படி இருக்கப் போகிறார்கள் என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது என்றார்.

ராஜ்யசபா முன்னாள் துணைத் தலைவர் நஜ்மா ஹெப்துல்லா கூறுகையில், சன்னிமுஸ்லீம்களுக்கு மிகவும் புனிதமான பக்ரீத் நாளின்போது சதாம்கொல்லப்பட்டுள்ளார். புனித நாளின்போது இயற்கையாக மரணம் அடைந்தால்நல்லது. ஆனால் நல்ல நாளில் கொலை செய்வது நாகரீகமானதல்ல.

ஈராக் மக்கள்தான் தங்களுக்கு எது சரி, எது தவறு என்பதை முடிவு செய்ய வேண்டும்.அவர்கள்தான் சதாமின் ஆட்சியின் கீழ் இருந்தவர்கள். அமெரிக்காவின் தலையீடுஇங்கே எதற்கு?. சதாமை எனக்கு நன்கு தெரியும். பலமுறை பல சந்தர்ப்பங்களில்அவரை சந்தித்துள்ளேன். அவரைத் தூக்கிலிட்டுள்ளது எனக்கு அதிர்ச்சி அளிக்கிறதுஎன்றார்.

வைகோ அதிர்ச்சி:

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில், இந்த செய்திமிகுந்த அதிர்ச்சி தருகிறது. கலக்கம் தருகிறது. ஒரு தலைப்பட்சமான இந்தத்தீர்ப்பினால், நீதியின் கோட்பாடுகள் குழி தோண்டிப் புதைக்கப்பட்டுள்ளன என்றுகூறியுள்ளார்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் தா.பாண்டியன் கூறுகையில், நாகரீகவேடமணிந்து உலக மக்களின் உணர்வுகளை, சட்டத்தை மதிக்காமல், அமெரிக்கஏகாதிபத்தியம் செய்த படுகொலை இது என்று கூறியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் வரதராஜன் கூறுகையில், அமெரிக்கஏகாதிபத்தியத்தின் இந்த வெறிச்செயலைக் கண்டித்து இன்று தமிழகம் முழுவதும்ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.

சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டதற்கு காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவைகண்டனம் தெரிவித்துள்ளன.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா கூறுகையில், இதை ஏற்றுக் கொள்ளவே முடியாது.ஆக்கிரமிப்பாளர்கள் அமைத்த ஒரு நீதிமன்றத்தில் நீதி கிடைக்கும் என எப்படி எதிர்பார்க்க முடியும்? உலக சமுதாயத்தின்எதிர்ப்பையும் மீறி சதாம் தூக்கிலிடப்பட்டது துரதிர்ஷ்டவசமானது என்றார்.

முஸ்லீம்கள் அமரர் தொழுகை:

சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டதைத் தொடர்ந்து உலகின் பல பகுதிகளிலும் முஸ்லீம்கள் அமரர் தொழுகை நடத்தி சதாமின் ஆத்மா சாந்தி அடையபிரார்த்தனை நடத்தினர்.

இன்று காலை சதாம் மரணச் செய்தி பரவியதும் தமிழகத்தில் பல முஸ்லீம்களின் வீடுகளிள் அமரர் தொழுகை நடத்தப்பட்டது. குடும்பத்தோடு சதாமுக்காகபிரார்தித்தனர்.

தமிழ் மாநில முஸ்லீம் லீக் தலைவர் ஷேக்தாவூத் தனது குடும்பத்துடன் தொழுகை நடத்திய பின் செய்தியாளர்களிடம் கூறுகையில்,

இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஜனநாயக விரோத செயல். அமெரிக்க எதேச்சதிகாரத்தை பலப்படுத்த உலக நாடுகளை அடி பணிய வைக்கும் செயல்இது. இப்படிப்பட்ட செயல்களால் முஸ்லீம்களை ஒடுக்க நினைக்கும் அமெரிக்காவை கடுமையாக கண்டிக்கிறோம். சதாமின் ஆன்மா சாந்தி அடையபிரார்த்திக்கிறோம் என்றார்.

சதாம் தூக்கிலிடப்பட்டதை தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகமும் கண்டித்துள்ளது. அதன் தலைவர் ஜவாஹிருல்லா கூறுகையில், இந்த நூற்றாண்டின் மிகவும்காட்டுமிராண்டித்தனமான, மிருகத்தனமான செயல் இது.

ஜனநாயகம், மனித உ>மை, சட்டம் பற்றிப் பேசுவதற்கு அமெ>க்காவுக்கு தகுதியே இல்லை. சர்வதேச நீதிமன்றத்தை மதிக்காமல், சதாமை அங்குநிறுத்தாமல், தனது ஆதிக்க பலத்தால் சதாமை தூக்கிலிட்டுள்ளதன் முலம் உலகின் பயங்கரமான பயங்கரவாதி ஜார்ஜ் புஷ்தான் எனபதுதெளிவாகியுள்ளது.

இந்த செயலைக் கண்டித்து சென்னையில் உள்ள அமெ>க்க துணைத் தூதரகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம் என்றார் இதேபோல பல்வேறுமுஸ்லீம் அமைப்புகள் சார்பிலும் இன்று மாலை 3 மணிக்கு அமெ>க்க துணைத் தூதரகத்தை நோக்கி ஊர்வலம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் அமெரிக்க துணைத் தூதரகம் உள்ள பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X