கேப்டன்-மாலைமுரசு மீது திமுக அவதூறு வழக்கு
சென்னை:தனது வீட்டில் நடந்த வருமான வரி சோதனை தொடர்பாக திமுக தலைவர் கருணாநிதி மீது குற்றம் சாட்டிப் பேசிய நடிகர் விஜய்காந்த் மீதும், அவரதுபேட்டியை வெளியிட்ட மாலை முரசு நாளிதழ் மீதும் திமுக அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது.
சமீபத்தில் விஜயகாந்த் உள்ளிட்டோரின் இருப்பிடங்களில் வருமான வரி சோதனை நடந்தது. முதல்வர் கருணாநிதி தூண்டுதலின் பேரில்தான் இந்தசோதனை நடத்தப்பட்டதாக விஜயகாந்த் குற்றம் சாட்டி பேட்டி அளித்திருந்தார்.
இந் நிலையில், திமுக சார்பில் அதன் பொருளாளரும், மின்துறை அமைச்சருமான ஆற்காடு வீராசாமி, விஜயகாந்த் மற்றும் அவரது பேட்டியைப்பிரசுரித்த மாலை முரசு நாளிதழின் ஆசி>யர் ஆகியோர் மீது சென்னை எழும்பூர் தலைமைப் பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் இன்று அவதூறுவழக்கு தொடர்ந்தார்.
அவர் தாக்கல் செய்த மனுவில், வருமான வரி சோதனை நடத்தப்பட்டதற்கு திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதிதான் காரணம் எனஅவதூறாக பேட்டி அளித்துள்ளார் விஜயகாந்த்.
இதன் மூலம் திமுக தொண்டர்களும், கருணாநிதி குடும்பத்தினரும், உற்றார், உறவினர்களும், நண்பர்களும் பெரும் மன உளைச்சலுக்குஆளாகியுள்ளனர்.
முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ள விஜயகாந்த் மீதும், அவரது பேட்டியை வெளியிட்ட மாலை முரசு நாளிதழ்மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.
ஏற்கனவே இதே நீதிமன்றத்தில் மதிமுக உட்கட்சிப் பூசல் தொடர்பாக கருணாநிதியை விமர்சித்ததற்காக வைகோ மீதும் திமுக சார்பில் அவதூறுவழக்கு தொடரப்பட்டுள்ளது நினைவிருக்கலாம். அந்த வழக்கில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழும் சேர்க்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications