அரசுப் பேருந்துகள் தனியார்மயமாகாது: நேரு
சென்னை:அரசு போக்குவரத்துக் கழகங்களை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை என்று தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு சட்டசபையில் தெரிவித்தார்.
சட்டசபையில் இன்று மார்க்சிஸ்ட் உறுப்பினர் மகேந்திரன் பேசுகையில், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு தனியார் பேருந்துகளை வாடகைக்கு அமர்த்தும் அரசின் திட்டம், பின் வாசல் வழியாக தனியார் மயத்தை கூட்டி வருகிறதோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது என்றார்.
இதற்கு போக்குவரத்து அமைச்சர் நேரு பதிலளிக்கையில், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தில் மொத்தம் 920 பேருந்துகள் உள்ளன. இவற்றில் 110 பேருந்துகள்தான் புதியவை. மற்றவை அனைத்தும் பழைய, மோசமான நிலையில் உள்ள பேருந்துகள்.
விரைவுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ. 26 கோடியாக உள்ளது. தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருப்பதை விட பேசாமல் போக்குவரத்துக் கழகத்தை மூடி விடலாம் என்று நிதித்துறை ஆலோசனை கூறியது.
ஆனால் ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அந்த நடவடிக்கையை அரசு விரும்பவில்லை.
எனவேதான், தமிழகத்திலிருந்து வெளி மாநிலங்களுக்கான சேவைக்கு, தனியாரிடமிருந்து வாடகைக்கு பேருந்துகளை வாங்கி பயன்படுத்தலாம் என்ற கொள்கை முடிவை அரசு எடுத்தது.
இந்தப் பேருந்துகளின் ஓட்டுநர்கள் தனியாராக இருப்பார்கள். ஆனால் நடத்துநர்கள் விரைவுப் போக்குவரத்துக் கழகத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.
அரசுப் போக்குவரத்துக் கழகங்களை தனியார் மயமாக்கும் எண்ணம் அரசிடம் இல்லை. தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுக்கும் திட்டம் தொடர்பாக சட்டசபையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும்.
அனைத்துத் தரப்பினருடன் கலந்து ஆேலாசித்த பின்னரே அது சட்டமாக்கப்படும் என்றார் நேரு.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications