மிசாவை விட ராணி மேரியே பெஸ்ட்
சென்னை:நாட்டில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டபோது, மிசா சட்டத்தின் கீழ் கைதாகி சிறை சென்றதை விட, ராணி மேரிக் கல்லூரியைக் காக்க கடந்த அதிமுகஆட்சிக்காலத்தில் கைதாகி சிறை சென்றதையே பெருமையாக, பெரிதாக நினைக்கிறேன் என்று உள்ளாட்சித் துறை அமைசர் மு.க.ஸ்டாலின்கூறியுள்ளார்.
சென்னை கடற்கரையில் உள்ள ராணி மேரிக் கல்லூரியின் 90வது பட்டமளிப்பு விழா கலைவாணர் அரங்கில் நடந்தது. இதில் கலந்து கொண்டுஸ்டாலின் பட்டங்களை வழங்கினார்.
பின்னர் ஸ்டாலின் பேசுகையில், 1914ம் ஆண்டு சென்னை மகளிர் கல்லூரியாக தொடங்கப்பட்ட இக்கல்லூரி, 1917ம் ஆண்டு ராணி மேரிக்கல்லூரி என பெயர் மாற்றம் அடைந்தது. இன்று நான்கு நட்சத்திர அந்தஸ்து பெற்று சிறப்புற திகழ்கிறது.
இந்தக் கல்லூரியை இடிக்க கடந்த ஆட்சிக்காலத்தில் நடந்த முயற்சிகளை எதிர்த்து மாணவிகளும், ஆசிரியைகளும் போராட்டம் நடத்தினர்.அப்போது நானும் குரல் காடுத்தேன். அதைப் பாராட்டி இங்கு கவிதை வாசித்தார்கள். என்னைக் கல்லூரியின் காவலன் என்று பாராட்டினார்கள்.
ஆனால் கடந்த அரசோ, இந்தக் கல்லூரியின் காவலாளியை தாக்கியதாக வழக்கு தொடர்ந்து சிறையில் தள்ளியது. நான் மிசாவில் கைதாகி சிறையில்இருந்ததை நண்பர்கள் பெருமையாக சொல்வார்கள். ஆனால் அதை விட பெருமையாக, ராணி மேரிக் கல்லூரியைக் காப்பதற்காக சிறை சென்றதைநினைக்கிறேன்.
இந்தக் கல்லூரி சாதாரணமான கல்லூரி அல்ல. எண்ணற்ற ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள், கல்வியாளர்கள், துணைவேந்தர்கள், இசை மேதைகளைஉருவாக்கிய கல்லூரி இது.
மருத்துவ, பொறியியல் படிப்புகளை கலை, அறிவியல் படிப்புகளே மனித வாழ்வோடு மிகவும் ஒட்டியவை. மொழிப் படிப்புகள் மனித வாழ்வுக்குமிகவும் அவசியம். சமூக வியல் படிப்புகள் சமூக மேம்பாட்டுக்குப் பயன்படும்.
அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பதெற்கு என்ற காலம் போய் விட்டது. அதற்கு வழியே இல்லாமல்தான் இப்போது கேஸ் அடுப்பு வழங்கிக்கொண்டிருக்கிறோம் என்றார் ஸ்டாலின்.
நிகழ்ச்சியில் ராணி மேரிக் கல்லூரியைக் காக்க நடந்த போராட்டத்தின்போது கல்லூரிக்காக குரல் கொடுத்த ஸ்டாலினைப் பாராட்டியும், அவர் சிறைசென்றதை நினைவுபடுத்தியும், நன்றி கூறியும் பேராசிரியைகள் லோகநாயகி, ராஜேஸ்வரி ஆகியோர் கவிதை பாடினர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications