கர்நாடகத்துடன் பேச்சே கிடையாது: கருணாநிதி
சென்னை:காவிரிப் பிரச்சினை தொடர்பாக கர்நாடக அரசுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தப்பட மாட்டாது என்று முதல்வர் கருணாநிதிதெளிவுபடுத்தியுள்ளார்.
காவிரிப் பிரச்சினை தொடர்பாக தமிழக முதல்வர் கருணாநிதியுடன் இன்னும் 10 நாட்களில் பேச்சு நடத்தப்படும் என்று கர்நாடக முதல்வர்குமாரசாமி தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக கருணாநிதி தனக்கு செய்தி அனுப்பியிருப்பதாகவும் குமாரசாமி கூறியிருந்தார்.
இதற்கு கருணாநிதி இன்று மறுப்பு தெரிவித்தார். தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது இதுகுறித்து கருணாநிதி கூறுகையில்,முன்னாள் பிரதமர் தேவெ கெளடா எனது நீண்ட நாளைய நண்பர். அவருக்கும், அவரது மகனும், கர்நாடக முதல்வருமான குமாரசாமிக்கும் நான் உகாதி வாழ்த்து தொடர்பாகத்தான் செய்தி அனுப்பினேன்.
நான் அனுப்பிய செய்தி முழுக்க முழுக்க உகாதி தொடர்பானதுதான். காவிரி தொடர்பானது அல்ல. எனவே கர்நாடகத்துடன் பேச்சு நடத்த நான்தயாராக இருப்பதாக குமாரசாமி கூறியிருந்தால் அது தவறானது, அதை செய்தியாக வெளியிட்டால் மிக மிக தவறானது.
காவிரிப் பிரச்சினை தொடர்பாக கர்நாடகத்துடன் பேச்சு நடத்தப்பட மாட்டாது என்றார் கருணாநிதி.
அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரி வரும் பாமக அதுதொடர்பாக சட்டசபையில் பிரச்சினை எழுப்பினால்எப்படி சமாளிப்பீர்கள் என்ற கேள்விக்கு, பிரச்சினை எழுப்பினால் அதை சந்திப்போம் என்றார் கருணாநிதி.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications