கேரள, ஆந்திர, கர்நாடக ஆறுகளின் உபரி நீரைதமிழகத்திற்குப் பெற நடவடிக்கை-துரைமுருகன்
சென்னை:அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநில ஆறுகளில் உள்ள உபரி நீரை தமிழகத்திற்கு வழங்குமாறு கோரி அந்த மாநில அரசுகளுக்கு தமிழக அரசு கோரிக்கை வைத்திருப்பதாக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன் சட்டசபையில் தெரிவித்தார்.
சட்டசபையில் பொதுப்பணித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து துரைமுருகன் பேசுகையில், தேசிய நீர் வள முகமை, தென் தீபகற்ப மாநிலங்களில் உபரி நீர் அதிகம் உள்ள வடி நிலப் பகுதிகள் மற்றும் பற்றாக்குறை உள்ள பகுதிகளைக் கண்டறிந்துள்ளது.
அந்த வகையில், ஆந்திர மாநிலம் மகாநதி, கோதாவரி ஆகிய ஆறுகளில் உருவாகும் உபரி நீரை, கிருஷ்ணா, பெண்ணார், காவிரி, வைகை ஆறுகளுக்கு வழங்கலாம் என அது பரிந்துரைத்துள்ளது.
இந்தத் திட்டத்தின்படி, மகாநதி, கோதாவரி ஆறுகளில் கிடைக்கும் உபரி நீர், கிருஷ்ணா ஆற்றுக்கும், பெண்ணாற்றுக்கும் திருப்பி விடப்படும். பின்னர் பெண்ணாரிலிருந்து காவிரிக்கு கால்வாய்கள் மூலம் அது எடுத்துச் செல்லப்படும்.
இந்த இணைப்பு மூலம் ஆந்திரா மற்றும் தமிழகத்தில் உள்ள ஏராளமான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும், காவிரி டெல்டா பகுதிக்கு கூடுதலாக 136.21 டிஎம்சி தண்ணீரும் கிடைக்கும்.
மற்றொன்று காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு. இந்த இணைப்பினால் குண்டாறு வரைக்கும் காவிரி நீரை விவசாயத்திற்குப் பயன்படுத்த முடியும்.
உபரி நீரைப் பங்கிடுவது தொடர்பாக ஆந்திர முதல்வருக்கு முதல்வர் கருணாநிதி ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளார். இரு மாநில நீர்வளத்துறை அமைச்சர்களும் சந்தித்துப் பேசலாம் என யோசனை தெரிவித்துள்ளார். மத்திய அரசுக்கும் இதுபோல கடிதம் எழுதப்பட்டுள்ளது.
இதேபோல தமிழகத்திற்குள் இருக்கும் ஆறுகளை இணைக்கும் திட்டமும் அமல்படுத்தப்படும். அதன்படி முதல் கட்டமாக கோரையாற்றிலிருந்து அக்னியாறு வரை புதிய கால்வாய் ஒன்று அமைக்கப்படும். பெண்ணையாற்றிலிருந்து செய்யாற்றை இணைக்கும் திட்டம், தாமிரபரணி ஆற்றின் வெள்ள நீரை கருமேனியாறு வரை எடுத்துச் செல்லும் திட்டம் ஆகியவை ஆய்வில் உள்ளன.
இந்த இணைப்புகள் மூலம் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருச்சி, புதுக்கோட்டை, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் பயன்பெறும் என்றார் துரைமுருகன்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications