லிப்ட்டில் சிக்கிய அமைச்சர்கள்-ராணுவம் மீட்டது
டப்ளின்:லிப்ட்டுக்குள் சிக்கி கடும் அவதிப்பட்ட அயர்லாந்து நாட்டின் முக்கிய அமைச்சர்கள் 6 பேரை ராணுவம் போராடி மீட்டு வெளியே கொண்டு வந்த சம்பவம் அயர்லாந்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அயர்லாந்து தலைநகர் டப்ளினில் அமைச்சரைவக் கூட்டம் நடந்தது. கூட்டம் முடிந்ததும், வெளியுறவு அமைச்சசர் டெர்மாட் அஹெர்ன், நிதித்துறை அமைச்சர் பிரையன் கோவன் மற்றும் சுகாதாரம், கல்வி, விவசாயம், தொலைத்தொடர்புத்துறை அமைச்சர்கள் லிப்ட்டில் சென்றனர்.
ஆனால் லிப்ட் பாதி வழியிலேயே பழுதடைந்து நின்று விட்டது. இதனால் அமைச்சர்கள் பீதியடைந்தனர். பலரையும் உதவிக்குக் கூப்பிட்டுப் பார்த்தும் யாரும் வரவில்லை.
நேரம் போகப் போக பீதி அதிகமாகவே, கடைசியில் ராணுவத்தைத் தொடர்பு கொண்டு தாங்கள் லிப்டுக்குள் சிக்கியிருப்பதை தெரிவித்தனர். இதையடுத்து ராணுவம் விரைந்து வந்தது.
கால் மணி நேரம் போராடி 6 அமைச்சர்களையும் ராணுவ வீரர்கள் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். மொத்தமாக ஆறு அமைச்சர்களும் அரை மணி நேரம் லிப்ட்டுக்குள் அவதிப்பட நேர்ந்தது.
முக்கியத் துறைகளின் அமைச்சர்கள் லிப்ட்டில் சிக்கி அவதிப்பட்ட சம்பவம், அயர்லாந்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து வெளியுறவு அமைச்சர் டெர்மாட் கூறுகையில், முதலில் சாதாரணமாகத்தான் இருந்தோம். ஜோக் சொல்லிக் கொண்டிருந்தோம்.
ஆனால் நேரம் போகப் போக பீதி ஏற்பட ஆரம்பித்தது. எங்களால் நகர முடியவில்லை. வியர்த்துக் கொட்டியது. அந்த இடமே சூடாகி விட்டது.
பலரையும் கூப்பிட்டுப் பார்த்தும் பலன் இல்லை. பாதுகாப்புத் துறை அமைச்சரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இறுதியில் ராணுவத்தைத் தொடர்பு கொண்டு மீண்டு வந்தோம்.
இதற்கு முன்பும் இதுபோல எங்களில் சிலர் லிப்ட்டில் சிக்கித் தவித்த அனுபவம் உண்டு. பிரதமருடன் நான் ஒருமுறை லிப்ட்டில் சிக்கியுள்ளேன். அதேபோல, துணைப் பிரதமரும், சுகாதாரத் துறை அமைச்சரும் ஒருமுறை இப்படி மாட்டிக் கொண்டு அவதிப்பட்டனர் என்றார் அவர்.
அயர்லாந்து அரசு அலுவலங்களில் லிப்ட்டுள் அடிக்கடி பழுதாவது சகஜமானதாம். ஆனால் இதுகுறித்து அரசு கவலைப்படாமல் இருப்பது அந்நாட்டு மக்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மொத்த அமைச்சரவையும் லிப்ட்டுக்குள் சிக்கி தவிக்கும் நிலை வருவதற்குள் அரசு சுதாரித்துக் கொள்ள வேண்டும் என அங்குள்ள பத்திரிக்கைகள் அயர்லாந்து அரசை கிழி கிழியென்று கிழித்துள்ளன.
-
இந்தியாவின் முப்படை தலைமை தளபதியாக தமிழர் நியமனம்! யார் இந்த என்.எஸ். ராஜா சுப்ரமணி? பின்னணி -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications