பழங்குடியினர் தாக்கி 50 பாக். தீவிரவாதிகள் பலி
டேரா இஸ்மாயில் கான் (பாகிஸ்தான்):பாகிஸ்தானின் பழங்குடியினர் நடத்திய திடீர் தாக்குதலில், அல் கொய்தா அமைப்பைச் சேர்ந்த 50 பேர் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லையில் தெற்கு வசிரிஸ்தான் பிராந்தியத்தில் உள்ள டேரா இஸ்மாயில்கான் என்ற இடத்தில் இந்த சண்டை நடந்துள்ளது.
தெற்கு வசிரிஸ்தானில் உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த அல் கொய்தா தீவிரவாதிகள் உள்ளிட்ட பல்வேறு தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் உள்ளனர்.
இவர்களை அப்பகுதியில் பெரும்பான்மையினராக உள்ள பஸ்தூன் பழங்குடி வகுப்பினர் விரும்பவில்லை. அப்பகுதியில் உள்ள அல் கொய்தா தீவிரவாதிகளை எதிர்த்துப் போராடி வருகின்றனர். அவர்களை அங்கிருந்து விரட்ட உறுதி பூண்டுள்ள அவர்கள் திடீரென தாக்குதலில் இறங்கினர்.
கடந்த ஒரு மாதமாக அவ்வப்போது நடந்து வரும் தாக்குதலில் இதுவரை 200 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நேற்று நடந்த தாக்குதலில் 50 பேர் கொல்லப்பட்டனர்.
வானா என்ற இடத்தில் உள்ள ஒரு கிராமத்தை சூழ்ந்த பழங்குடியினர் அங்குள்ள தீவிரவாதிகள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தினர். இதில் உஸ்பெக்கிஸ்தானைச் சேர்ந்த 44 தீவிரவாதிகள் மற்றும் ஐந்து பழங்குடியினர் உயிரிழந்தனர் என்று தெற்கு வசிரிஸ்தான் பிராந்திய அரசு நிர்வாகி ஹுசைன்ஸாதா கான் கூறினார்.
அப்பகுதியில் தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது. இதுவரை 40 தீவிரவாதிகள் ராணுவத்திடம் சரணடைந்துள்ளனர். இந்த சண்டைக்கும் தங்களுக்கும் தொடர்பு இல்லை என்று பாகிஸ்தான் ராணுவம் கூறியுள்ளது. ஆனால் பாகிஸ்தான் ராணுவம் மறைமுகமாக பழங்குடியினருக்கு உதவி வருவதாக கூறப்படுகிறது.
சண்டையைத் தொடர்ந்து இப்பகுதியில் பதுங்கியிருந்த ஆயிரக்கணக்கான தீவிரவாதிகள் பாதுகாப்பான மலைப் பகுதிகளுக்கு தப்பி ஓடி வருகின்றனர்.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications