திருச்சி விமான நிலையத்துக்கு குண்டு மிரட்டல்
திருச்சி:திருச்சி விமான நிலையத்தை வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப் போவதாக வந்த கடிதத்தால் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
திருச்சி விமான நிலையத்தில் தற்போது வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்படுகின்றன. கடந்த 26ம் தேதி முதல் சர்வதேச விமான நிலையமாக இயங்கி வருகிறது.
இந்த நிலையில் விமான நிலைய வளாகத்தில் கேட்பாரற்று ஒரு கடிதம் கிடந்தது. இதை எடுத்துப் பார்த்தபோது, அதில், விமான நிலையம் வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப்படும் என எழுதப்பட்டிருந்தது.
இதையடுத்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக போலீஸாருக்குத் தகவல் தரப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்களுடன் போலீஸார் விரைந்து வந்து விமான நிலையத்தில் சோதனை நடத்தினர். இதில் குண்டுகள் எதுவும் சிக்கவில்லை.
இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பயணிகள், பார்வையாளர்கள் முழுமையான சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.
வாகனங்கள் அனைத்தும் ஒரு வழிப் பாதையில் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. கடிதத்தை விமான நிலையத்தில் போட்டு விட்டுச் சென்றது யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
-
நாளை மறுநாள் திருச்சி செல்லும் விஜய்.. முதல்வரான பிறகு பொதுவெளியில் முதல் நிகழ்ச்சி! பிளான் என்ன? -
பெங்களூருவுடன் ஒப்பிடுவது தவறு.. பரந்தூர் விமான நிலையம் குறித்து பூவுலகின் நண்பர்கள் கருத்து -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications