தண்ணீரை விட ராஜினாமா மேல்: குமாரசாமி
Subscribe to Oneindia Tamil
மாண்டியா:தமிழகத்திற்குத் தண்ணீர் தர வேண்டிய நிலைமை ஏற்பட்டால் அதற்குப் பேசாமல் எனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டுப் போய் விடுவேன் என கர்நாடக முதல்வர் குமாரசாமி கூறியுள்ளார்.
கர்நாடக மாநிலம் மாண்டியாவுக்கு வந்த குமாரசாமி அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில்,
கர்நாடக விவசாயிகளின் நலனைப் புறக்கணித்து விட்டு தமிழகத்திற்குத் தண்ணீர் தந்தே ஆக வேண்டும் என்ற நிலை வந்தால், பேசாமல் எனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விடுவேன்.
முதல்வர் பதவியை உதறி விட்டு விவசாயிகளுடன் சேர்ந்து போராட்டத்தில் குதிப்பேன்.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்றார் குமாரசாமி.












Click it and Unblock the Notifications