சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்த்து உ.பியில் வழக்கு
Subscribe to Oneindia Tamil
லக்னோ:சேது சமுத்திரத் திட்டத்திற்குத் தடை விதிக்கக் கோரி அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ கிளையில் பொது நலன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்து தனிநபர் சட்ட வாரியம் சார்பில் இந்த வழக்கு போடப்பட்டுள்ளது. அதில், சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றினால் பழமை வாய்ந்த ராமர் பாலம் சேதமடையும், அழிந்து விடும்.
நாசா நிறுவனத்தின் கார்பன் டேட்டிங் முறைப்படி, ராமர் பாலம் 17 லட்சம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என அறியப்பட்டுள்ளது. எனவே ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும். சேது சமுத்திரத் திட்டத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
இந்த மனு நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.












Click it and Unblock the Notifications