பைக்குடன் அரசு பஸ் மீது மோதி இளைஞர் தற்கொலை-பஸ் சாம்பல்
மகாபலிபுரம்:ஒரு பெண்ணும் தன்னைக் காதலிக்காததால், வெறுப்படைந்த கல்லூரி மாணவர், அரசு பேருந்து மீது வேகமாக மோட்டார் சைக்களில் சென்று மோதி தற்கொலை செய்து கொண்டார். இதில் அரசுப் பேருந்து முற்றிலும் எரிந்து சாம்பலானது.
காரைக்காலில் இருந்து புதுச்சேரி அரசுக்கு சொந்தமான அரசுப் பேருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்தது. கிழக்குக் கடற்கரைச் சாலையில், கடம்பாடி பகுதியில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் பேருந்து வந்து கொண்டிருந்தது.
அப்போது எதிர் திசையில் மோட்டார் சைக்கிளில் ஒரு வாலிபர் வேகமாக வந்தார். நேராக பேருந்து மீது பயங்கரமாக மோதினார். இதில் பேருந்து தீப்பிடித்துக் கொண்டது. அந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார்.
பேருந்தில் தீப்பிடித்துக் கொண்டவுடன் பயணிகள், ஓட்டுநர், நடத்துனர் ஆகியோர் அலறி அடித்தபடி கீழே இறங்கி உயிர் தப்பினர். மொத்தம் 61 பேர் பேருந்தில் இருந்தனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எதுவும் ஏற்படவில்லை.
போலீஸார் விரைந்து வந்து வாலிபரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் வைத்திருந்த ஒரு டைரியைக் கைப்பற்றினர்.
அவரது பெயர் ரகுபதி. 23 வயதாகும் அவர், விருத்தாச்சலம் அருகே உள்ள முப்பள்ளி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். சென்னையில் உள்ள கல்லூரியில் படித்து வருகிறார்.
பலரைக் காதலித்துள்ளார் ரகுபதி. எல்லாம் ஒரு தலைக் காதல். எந்தப் பெண்ணும் இவரது காதலை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால் விரக்தி அடைந்து அவர் தற்கொலை செய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த சம்பவத்தில் அரசுப் பேருந்து முற்றிலும் எரிந்து சாம்பலாகி விட்டது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications