கற்பழித்தது எப்படி? கைதிகளிடம் ராகிங்!!
சேலம்: கற்பழிப்பு வழக்குகளில் சிக்கி சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளிடம், ஏற்கனவே பல்வேறு குற்றச் செயல்களில் சம்பந்தப்பட்டு கைதாகி அடைக்கப்பட்டுள்ள கைதிகள், கற்பழித்தது எப்படி என்று கேட்டு ராகிங் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மத்திய சிறையில் கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் புதிதாக சிறைக்கு வரும் கைதிகளை, ஏற்கனேவ அடைக்கப்பட்டுள்ள கைதிகள், ராகிங் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நள்ளிரவில் பாட்டுப் பாடச் சொல்லியும், இரவுப் பணியில் ஈடுபட வைத்தும், தூங்க விடாமல் தொல்லை செய்தும் ராகிங் செய்கிறார்களாம்.
சில நாட்களுக்கு முன்பு வாலிபர் ஒருவர் கற்பழிப்பு வழக்கில் கைதாகி சேலம் சிறைக்கு வந்துள்ளார். செய்தது தவறாக இருந்தாலும் படிப்பில் படு கெட்டிக்காரராம் அந்த வாலிபர். பத்தாம் வகுப்பு தேர்வில் 420 மதிப்பெண் எடுத்துள்ளார். மாநில அளவில் நடந்த பேச்சு போட்டிகளில் பல பரிசுகளையும் வென்றுள்ளார்.
கூடா நட்பினால் கெட்டுப் போய், கற்பழிப்பு வழக்கில் சிக்கி சிறை தண்டனை பெற்றுள்ளார். இவரை 50க்கும் மேற்பட்ட சீனியர் கைதிகள் சூழ்ந்து கொண்டு எப்படி கற்பழித்தாய்? அப்போது எப்படி இருந்தது? என்று கூறக் கூறி துன்புறுத்தியுள்ளனராம்.
சிறைக்கு உள்ளே நடக்கும் இந்த ராகிங் கொடுமைக்கு சிறை அதிகாரிகள் முடிவு கட்ட வேண்டும் என முதன் முதலாக சிறைக்குச் சென்று, சீனியர் கைதிகளிடம் சிக்கித் தவித்த புதுக் கைதிகள் பரிதாபமாக கோருகின்றனர்!












Click it and Unblock the Notifications