தமிழர்கள் கொலை-இலங்கை மீது சர்வதேச குழு புகார்
லண்டன்:இலங்கையில் சட்டத்தின் ஆட்சி கேள்விக்குறியாகி வருகிறது. 17 சுனாமி நிவாரணப் பணியாளர்கள் கொல்லப்பட்டது குறித்த விசாரணையை இலங்கை அரசு அலட்சியப்படுத்தி வருகிறது என்று சர்வதேச வழக்கறிஞர் குழு என்ற மனித உரிமை அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
இலங்கையின் மட்டூர் பகுதியில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சுனாமி நிவாரணப் பணிகளுக்காக பிரான்ஸிலிருந்து வந்த நிவாரணப் பணியாளர்கள் 17 பேர் (அனைவரும் தமிழர்கள்) கொல்லப்பட்டனர்.
இவர்களை புலிகள்தான் கொன்றதாக முதலில் இலங்கை அரசு கூறியது. ஆனால் இலங்கை ராணுவம்தான் இவர்களைக் கொடூரமாக கொலை செய்ததாக பின்னர் தெரிய வந்தது.
இதுதொடர்பான விசாரணையை படு மந்தமாக நடத்தி வருகிறது இலங்கை அரசு. இதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. லண்டனில் இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய, சர்வதேச வழக்கறிஞர்கள் கமிஷன் (சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்தது) அமைப்பின் பொதுச் செயலாளர் நிக்கோலஸ் ஹோவன் கூறுகையில், இந்த விசாரணை பாரபட்சமின்றி நடத்தப்பட வேண்டும். வெளிப்படையாக நடக்க வேண்டும்.
ஆனால் இதுவரை சம்பவத்தில் தொடர்புடைய ஒரு ராணுவ வீரரைக் கூட இலங்கை போலீஸார் இன்னும் விசாரிக்கவில்லை. இது எங்களுக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.
இலங்கையில் நீதிக்கு பெரும் அநீதி நிகழ்த்தப்படுகிறது என்பதற்கு இது சரியான உதாரணமாகும். அங்கு சட்டத்தின் ஆட்சி கேள்விக்குறியாகி வருவதையே இது உணர்த்துகிறது.
கடந்த 2002ம் ஆண்டு ஏற்பட்ட போர் நிறுத்தம் கடந்த ஆண்டுடன் முடிந்து ேபாய் விட்டது. அதன் பின்னர் கடத்தல்கள், கொடுமைகள், கொலைகள் அதிகரித்து விட்டன.
எனவே இந்த விசாரணை குறித்து ஆய்வு செய்ய ஐ.நா. மனித உரிமை பார்வையாளர்களை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்றார் அவர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications