பாலாறு- சுப்ரீம் கோர்ட்டில் தமிழகம் வழக்குரெட்டி டபுள் ஆக்ட்
டெல்லி:பாலாற்றின் குறுக்கே அணை கட்டும் ஆந்திர அரசின் முயற்சிக்குத் தடை விதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
இதுதொடர்பாக நேற்று தமிழக அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், 1892ம் ஆண்டு ஒப்பந்தத்தை மீறும் வகையில், ஆந்திர அரசு சித்தூர் மாவட்டம் குப்பம் அருகே உள்ள கணேசபுரம் என்ற இடத்தில் பாலாற்றின் குறுக்கே அணை கட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.
தமிழகத்திடம் ஆலோசனை செய்யாமல் அணை கட்ட மாட்டோம் என ஆந்திர அரசு உறுதியளித்திருந்தது. ஆனால் இப்போது தமிழக அரசுக்குத் தெரிவிக்காமல் அணை கட்டுவது தொடர்பான டெண்டரை விட நடவடிக்கை எடுத்துள்ளது.
இரு மாநிலங்களுக்கும் இடையே பாலாறு ஓடுகிறது. எனவே தமிழகத்தின் கருத்தைக் கேட்காமல் ஆந்திர அரசு தன்னிச்சையாக அணை கட்ட முடியாது.
வேலூர், காஞ்சிபுரம், சென்னை நகரம் ஆகிய மாவட்டங்களின் ஒரே குடிநீர் ஆதாரம், விவசாய ஆதாரம் பாலாறுதான். எனவே ஆந்திர அரசின் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந் நிலையில் நேற்று சித்தூர் மாவட்டத்தில் நிகழ்ச்சியொன்றில் பேசிய ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி,
நான் இன்னும் 2 மாதங்களில் இங்கு மீண்டும் வருவேன். அப்போது பாலாறு அணைக்கு அடிக்கல் நாட்டுவேன். ரூ. 50 கோடி மதிப்பிலான இத் திட்டத்துக்கு டெண்டர்கள் விடப்பட்டுவிட்டன என்றார்.
அதே நேரத்தில் பாலாற்றில் அணை கட்ட மாட்டோம் என தமிழக அரசிடம் ஆந்திரம் தொடர்ந்து உறுதிெமாழி அளித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications