ராஜ்யசபா எம்பி தேர்தல்: 6வது சீட் யாருக்கு?- திமுக, அதிமுக கடும் போட்டி
சென்னை:தமிழகத்தில் காலியாகும் 6 ராஜ்யசபா இடங்களுக்கு நடைபெறவுள்ள தேர்தலில் 6வது எம்.பி. சீட்டைப் பெற திமுக, அதிமுக கூட்டணிகளுக்கு எம்.எல்.ஏக்கள் பலம் இல்லாததால் பரபரப்பு அதிகரித்துள்ளது.
தமிழகத்திலிருந்து ராஜ்யசபா உறுப்பினர்களாக உள்ள கே.பி.கே.குமரன், நடிகர் எஸ்.எஸ்.சந்திரன், கோகுல இந்திரா, ஞானதேசிகன் உள்ளிட்ட 6 பேரின் பதவிக் காலம் முடிவடைகிறது.
இதையடுத்து அந்த ஆறு இடங்ளுக்கும் அடுத்த மாதம் 15ம் தேதி ேதர்தல் நடைபெறவுள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை, சட்டசபை உறுப்பினர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் ெகாண்டு, ஒருவர் வெற்றி பெற 34 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை.
அந்த அடிப்படையில், திமுக கூட்டணிக்கு 4 எம்.பிக்கள் கிடைப்பார்கள். அதிமுக கூட்டணிக்கு ஒரு எம்.பிதான் கிடைப்பார். இதனால் அதிமுக 4 எம்பிக்களை இழக்கப் போகிறது.
6வது வேட்பாளர் தேர்வு பெற இரு கூட்டணிகளுக்கும் இரு உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது.
திமுக கூட்டணியில் தற்ேபாது 165 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். அதிமுக கூட்டணிக்கு 66 பேர் உள்ளனர்.
அதிமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் தொடர்ந்து இருந்திருந்தால் இரண்டாவது எம்பியையும் ஜெயலலிதாவால் வெல்ல வைக்க முடிந்திருக்கும். சிறுத்தைகள் வெளியேறிவிட்டதால் அந்த வாய்ப்பு போய்விட்டது.
மேலும் அதிமுக உறுப்பினராக இருந்த மதுரை மேற்கு எம்.எல்.ஏ எஸ்.வி.சண்முகம் இறந்தது அக்கட்சிக்கு பின்னடைவைக் ெகாடுத்துள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் ஆதரவு கிடைத்தாலும் கூட அதிமுகவால் இரண்டாவது எம்பி சீட்டை வெல்ல முடியாத நிலை உள்ளது.
இதனால் திமுக கூட்டணியைச் சேர்ந்த யாராவது ஒரு எம்எல்ஏவை இழுத்தால் அதிமுகவுக்கு கூடுதலாக ஒரு எம்பி கிடைப்பார்.
அதேபோல அதிமுக கூட்டணியைச் சேர்ந்த ஒரு எம்எல்ஏவை திமுக இழுத்தால் அந்த எம்பி பதவி திமுக கூட்டணிக்குக் கிடைக்கும் என்ற பரபரப்பான சூழல் நிலவுகிறது.
இந்த ஒரு இடத்துக்கு இழுபறி ஏற்பட்டால் இரண்டாவது சுற்று (செகண்ட் பிரிபரென்சியல் எலெக்ஷன்) தேர்தல் நடக்கும். அவ்வாறு நடந்தால் அதை திமுக கைப்பற்ற வாய்ப்புள்ளது.
திமுக தனக்குக் கிடைக்கும் 4 எம்பி சீட்களில் ஒன்றை காங்கிரசுக்கும், இன்னொன்றை சிபிஐக்கும் விட்டுத்தர உள்ளது. சட்டமன்றத் தேர்தல் தொகுதி உடன்பாட்டின்போதே இதற்கான உறுதிமொழியை இந்திய கம்யூனிஸட் கட்சிக்கு திமுக தந்துள்ளது.
இந்த இடத்தில் மூத்த கம்யூனிஸ்ட் தலைவரும் நேர்மை, எளிமைக்குப் பேர் போனவருமான நல்லகண்ணு நிறுத்தப்படலாம் என்று தெரிகிறது.
திமுக சார்பில் முன்னாள் தினகரன் அதிபரும், தினத்தந்தி அதிபர் சிவந்தி ஆதித்தனின் மருமகனுமான கே.பி.கே.குமரன் மீண்டும் போட்டியிடக் கூடும் எனத் ெதரிகிறது.
அதேபோல முதல்வரின் மகள் கனிமொழி, மகன் மு.க.அழகிரி ஆகிேயாரில் ஒருவருக்கும் சீட் கிடைக்கக் கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இருவரில் யார் எம்.பியாக தேர்ந்ெதடுக்கப்பட்டாலும் அவர்கள் மத்திய அமைச்சராவதும் உறுதி.
ராசாவிடம் இருந்த வனத்துறையின் கேபினட் பொறுப்பை திமுக எந்த அைமச்சருக்கும் ஒதுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அந்தப் பொறுப்பு பிரதமரிடமே உள்ளது.
அந்தத் துறையின் இணையமைச்சர் பொறுப்பு தான் பழனி மாணிக்கதிடம் கூடுதலாகத் தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications