நள்ளிரவு கைது புகழ் கருணாநிதி வழக்கு ரத்து
சென்னை முதல்வர் கருணாநிதியை நள்ளிரவில் கைது செய்யக் காரணமாக அமைந்த சென்னை நகர மேம்பால ஊழல் வழக்கை கைவிட சிபிசிஐடி முடிவு செய்துள்ளது. இதையடுத்து இந்த வழக்கு விரைவில் நீதிமன்றத்தில் தள்ளுபடியாகும் எனத் தெரிகிறது.
கடந்த திமுக ஆட்சியில் சென்னை நகரில், மு.க.ஸ்டாலின் மேயராக இருந்தபோது, 9 மேம்பாலங்கள் கட்டப்பட்டன. பின்னர் அதிமுக ஆட்சிக்கு வந்ததும், இந்த மேம்பாலங்கள் கட்டும் பணியல் பெரும் முறைகேடுகள் நடந்ததாக கூறி முதல்வர் கருணாநிதி, மு.க.ஸ்டாலின், கோ.சி.மணி உள்ளிட்ட 14 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் கருணாநிதியை 2001ம் ஆண்டு ஜூன் 29ம் தேதி நள்ளிரவில் அதிரடியாக கைது செய்தது போலீஸ். நாட்டையே உலுக்கியது இந்த கைது சம்பவம்.
இவ்வழக்கில் கிட்டத்த நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு 2005ம் ஆண்டு மே மாதம் 6வது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் வழக்கு விசாரணை நடைபெறவே இல்லை. பல காரணங்களால் வழக்கு இழுத்தடித்துக் கொண்டிருந்தது.
இந்த நிலையில், ஆட்சி மாற்றம் நடந்தது. திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தது. திமுக ஆட்சிக்கு வந்ததும், இந்த வழக்கு குறித்து ஆராயப்பட்டது. அதில், வழக்கில் தொடர்புடைய இரு ஐஏஎஸ் அதிகாரிகள் இன்னும் அரசுப் பணியில் இருப்பது தெரிய வந்தது.
அரசுப் பணியில் இருப்பவர்கள் மீது வழக்கு தொடர வேண்டுமானால், அரசின் அனுமதி பெற வேண்டும். ஆனால் இந்த இரு ஐஏஎஸ் அதிகாரிகள் விஷயத்தில் இது மேற்கொள்ளப்படவில்லை.
மேலும் குற்றச்சாட்டுக்களில் உண்மை இல்லை, தவறான தகவல்களின் அடிப்படையில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அரசு வக்கீல்கள் சிபிசிஐடியிடம் கருத்து தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கை தொடர்ந்து மேற்கொள்ளாமல் கைவிட சிபிஐடி முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக அரசு வக்கீல்களின் கருத்துக்களையும் சேர்த்து நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
எனவே விரைவில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்யும் எனத் தெரிகிறது.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications