கருணாநிதி பிறந்த நாள்: ஏற்பாடுகள் தீவிரம்-டிஜிட்டல் அழைப்பிதழ் ரெடி
சென்னை:முதல்வர் கருணாநிதியின் 84வது பிறந்த நாளை பிரமாண்டமாக கொண்டாட திமுகவினர் பெரிய அளவில் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். மிக நவீனமான டிஜிட்டல் அழைப்பிதழும் அச்சிடப்பட்டுள்ளது.
முதல்வர் கருணாநிதியின் 84வது பிறந்த நாள் ஜூன் 3ம் தேதி வருகிறது. இதையொட்டி வள்ளுவர் கோட்டத்தில் ஜூன் 1ம் தேதி விழா நடைபெறுகிறது.
அன்று மாலை 6 மணிக்கு பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளனர் திமுகவினர். லேசர் காட்சிகள், 3டி அனிமேஷன் காட்சிகள், குறும்படம் உள்ளிட்ட அதி நவீன கணிணிக் கலக்கலுடன் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முதல்வரின் சிறப்பை விளக்கும் வகையிலான கலை நிகழ்ச்சிகள், நடனம், நாடகம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் புதுமையாக, தமிழ்த்தாய் வரவேற்புரை ஆற்றவும், திருவள்ளுவர் நன்றி கூறவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விழாவுக்கான அழைப்பிதழிலும் வித்தியாசம் காட்டப்பட்டுள்ளது. டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் கூடிய அந்த அழைப்பிதழைத் திறந்தால் இனிய குரலில் ஒரு பெண் பேசுகிறார். முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் பிறந்த நாள். உலகத் தமிழர்களின் உன்னதத் திருநாள், ஆயிரம் விளக்கு பகுதியின் சார்பில் அகம் மகிழ அழைக்கிறோம், வாருங்கள், வாருங்கள் என்று அந்தக் குரல் கூறுகிறது.
மேலும் அழைப்பிதழில் உள்ள முதல்வரின் படத்தை ஒரு பக்கம் சாய்த்தால் பெரியார் தெரிகிறார், மற்றொரு பக்கம் சாய்த்தால் அண்ணா தெரிவது போலவும் அசத்தியுள்ளனர்.
மொத்தத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பிரமாண்டமாக முதல்வரின் பிறந்த நாளைக் கொண்டாட திமுகவினர் ஏற்பாடு செய்து தடபுடல் படுத்தி வருகின்றனர்.
-
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications