தொழிலதிபர் ராஜ்குமார் கடத்தல்-வெள்ளை ரவிகூட்டாளி பரபரப்பு வாக்குமூலம்
சென்னை:தொழில் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டவே தொழில் அதிபர் ராஜ்குமாரை வெள்ளை ரவி கடத்தி சென்றதாக ரவியின் கூட்டாளியும், அவனது அக்காள் மகனுமான ராஜ்குமார் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
கடந்த 20 வருடமாக சென்னை மக்களை பீதிக்குள்ளாக்கி வரும் ரவுடி வெள்ளை ரவி மீது கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், அடிதடி என பல வழக்குகள் உள்ளன. இதையடுத்து போலீஸார் வெள்ளை ரவியை எண்கவுண்ட்டர் மூலம் சுட்டுத்தள்ள 2 முறை முயற்சித்தனர்.இதையடுத்து ரவி அரசியலில் குதித்தான். சென்னை பெரம்பூர் சட்டசபை தேர்தலில் சுயோச்சையாக போட்டியிட்டு 6,000 ஒட்டுக்கள் வாங்கினன்.
இதையடுத்து கர்நாடக மாநிலம் பெல்காமைச் சேர்ந்த ஒரு காங்கிரஸ் கட்சிப் பிரமுகரின் மகளை திருமணம் செய்து கொண்டு பெல்காமில் வசித்து வந்தான்.
பெல்காமில் இருந்து கொண்டே ஆட்கள் மூலம் சென்னையில் கட்டப் பஞ்சாயத்தில் ஈடுப்பட்டு வந்தான்.
இந் நிலையில் சமீபத்தில் ராஜ்குமார் என்ற தொழிலதிபரைக் கடத்தி ரூ. 60 லட்சம் பணத்தைப் பறித்தான் ரவி.
ரவி கும்பலிடமிருந்து தப்பி வந்த ராஜ்குமார் கொடுத்த புகாரின் பேரில் ரவியை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். ரவியை கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ரவியின் கூட்டாளிகள் சில தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டனர். இதில் டிவி துணை நடிகை சானியா, ரவியின் அக்கா மகன் ராஜ்குமார் உள்பட 5 பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விசாரணையில் ரவியின் அக்கா மகன் ராஜ்குமார் கொடுத்த வாக்குமூலம்,
தொழிலதிபர் ராஜ்குமார் குடும்பத்தினர் லைசென்ஸ் பெற்று செம்மர கட்டைகளை வெளிமாநிலங்களுக்கு கொண்டு சென்று விற்று வருகின்றனர். ஆனால் வெள்ளை ரவி செம்மர கட்டைகளையும், சந்தன கட்டைகளையும் கடத்தி வந்தார். இந்த விஷயத்தில் ராஜ்குமார் குடும்பத்திற்கும், ரவிக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந் நிலையில் ரவியின் சந்தன கட்டைகள் வனத்துறை அதிகாரிகளிடம் அடிக்கடி சோதனையில் சிக்கின. இதனால் ரவிக்கு பெரும் அளவில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் ராஜ்குமார் குடும்பத்தினர் வனத்துறைக்கு கடத்தல் குறித்து ரகசிய தகவல் கொடுத்திருக்கலாம் என ரவிக்கு சந்தேகம் வந்தது.
நஷ்டத்தை சரி கட்டவே வெள்ளை ரவி ரூ. 2 கோடி பணம் கோட்டு ராஜ்குமாரை கடத்தினார் என்று கூறியுள்ளான்.












Click it and Unblock the Notifications