பாக்.: தீவிரவாதிகள் தாக்குதலில் 41 பேர் பலி
இஸ்லாமாபாத்:பாகிஸ்தானின் வட மேற்கு எல்லைப்புற மாகாணத்தில் தீவிரவாதிகள் அடுத்தடுத்து நடத்திய பயங்கர தற்கொலைப் படைத் தாக்குதல்களில் 41 பேர் உயிரிழந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் போலீஸார் மற்றும் ராணுவத்தினர் என்பதால் பாகிஸ்தானில் பதட்டம் நிலவுகிறது.
இஸ்லாமாபாத்தில் உள்ள சிவப்பு மசூதி எனப்படும் லால் மசூதிக்குள் புகுந்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து தலிபான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகம் உள்ள வட மேற்கு எல்லைப்புற மாகாணத்தில் வன்முறை அதிகரித்துள்ளது.
ராணுவத்தினர், துணை ராணுவத்தினர், போலீஸாரைக் குறி வைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
நேற்று தேரா இஸ்மாயில் கான் என்ற நகரில் காவல் நிலையம் ஒன்று தற்கொலைப் படைத் தீவிரவாதியால் தாக்கி தகர்க்கப்பட்டது. இதில் அந்தக் காவல் நிலையத்தில் இருந்த 26 போலீஸாரும் உயிரிழந்தனர்.
இதேபோல, ஸ்வாட் என்ற பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் சென்ற வாகனம் தற்கொலைப் படையினரால் தகர்க்கப்பட்டது. இதில் 11 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த வாகனம் மட்டா என்ற இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
மட்டா சம்பவத்தில் பொதுமக்கள் தரப்பில் 3 பேர் உயிரிழந்தனர். நேற்று இந்த மாகாணத்தில் நடந்த அடுத்தடுத்த தற்கொலைப் படைத் தாக்குதல்களில் மொத்தமாக 41 பேர் உயிரிழந்ததாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து பதட்டம் நிலவி வருவதால் அதிக அளவில் ராணுவத்தினரும், துணை நிலை ராணுவத்தினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications