சென்ட்ரலில் தாதர் எக்ஸ்பிரஸ் கவிழ்ந்தது:ரயில் போக்குவரத்து 4 மணி நேரம் பாதிப்பு
சென்னை:மும்பை செல்லும் தாதர் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தடம் புரண்டு கவிழ்ந்தது. இதனால் பல ரயில்கள் நடு வழியில் நிறுத்தப்பட்டன. சுமார் 4 மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சென்னையில் இருந்து தினமும் காலை 7 மணிக்கு தாதர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படும். இன்று அதிகாலை 4.30 மணியளவில் இந்த ரயில் ரயில்வே யார்டில் இருந்து ரயில் நிலையத்துக்குக் கொண்டு வரப்பட்டது.
ரயில் நிலையத்திற்குள் நுழைந்து கொண்டிருந்தபோது இந்த ரயிலின் இரு பெட்டிகள் தடம் புரண்டு இரு தண்டவாளங்களுக்கு இடையே கவிழ்ந்தன.
இதனால் இந்த இரு தண்டவாளங்களிலும் செல்லும் ரயில்கள் ஆங்காங்கு நிறுத்தப்பட்டன. மேலும் சென்ட்ரலில் இருந்து கிளம்ப வேண்டிய ரயில்களும் நிறுத்தப்பட்டன.
சுமார் 3 மணி பேராட்டத்துக்குப் பின் கவிழ்ந்த பெட்டிகள் நிலை நிறுத்தப்பட்டன. இதையடுத்து அந்த ரயில் 10 மணிக்கு மும்பைக்குக் கிளம்பிச் சென்றது.
இந்த விபத்தால் கோரமண்டல் எக்ஸ்ிபரஸ், அகமதாபாத் எக்ஸ்பிரஸ், சப்தகிரி எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்களும் பல மணி நேரம் தாமதமாகக் கிளம்பிச் சென்றன.
அதே போல சென்னைக்கு வந்து கொண்டிருந்த பெங்களூர் எக்ஸ்பிரஸ், கோவை எக்ஸ்பிரஸ், நீலகிரி எக்ஸ்பிரஸ், தமிழ்நாடு எக்ஸ்பிரஸ், கொச்சின் எக்ஸ்பிரஸ், சார்மினார் எக்ஸ்பிரஸ், திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், அரக்கோணம் எக்ஸ்பிரஸ் ஆகியவை வழியிலேயே நிறுத்தப்பட்டு பல மணி நேரம் தாமதமாக சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடைந்தன.
இதனால் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
-
அம்மா சென்டிமென்ட்.. அறுக்காதீங்க லாரன்ஸ்! கொந்தளித்த ப்ளூ சட்டை மாறன்! சரமாரி விமர்சனம் -
குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க என்ன நடவடிக்கை?.. தமிழக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
கரண்ட் பில் கட்ட கடைசி தேதி முடிஞ்சுடுச்சா? பதறாதீங்க.. இனிமேல் இப்படி ஒரு வசதி இருக்கு! -
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
திருவள்ளூர் முட்புதரில் 3 வயது குழந்தை... ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு கொடுமை! சிங்கப்பெண் படை எங்கே? -
ஓமன் அருகே கப்பலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. குளிர்ந்த நீரால் உடலை பாதுகாக்க போராடும் சக ஊழியர்கள் -
50 கி.மீ வேகத்தில் காற்று.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! 5 மாவட்டங்களுக்கு வார்னிங் -
ஏமாற்றம் கொடுத்த மேட்டூர்.. கைவிடாத மழை! டெல்டாவுக்கு இன்று கனமழை அலர்ட்! -
கள உதவியாளர் தேர்வு: இனி 'ஷூ' அணிந்து கம்பம் ஏறலாம்! மின்வாரியத்தின் புதிய விதிகள்!












Click it and Unblock the Notifications