தபால் நிலையத்தில் தலித்துகளுக்குத் தடைபெண் போஸ்ட் மாஸ்டர் கைது
கோவை:கோவை மாவட்டம் மதுக்கரை அருகே உள்ள திருமலையாம்பாளையம் கிராமத்தில் உள்ள தபால் நிலையத்திற்குள் தலித் சமூகத்தினரை அனுமதிக்க மறுத்து வந்த பெண் போஸ்ட் மாஸ்டரை போலீஸார் கைது செய்தனர்.
திருமலையாம்பாளையத்தைச் சேர்ந்தவர் சுமதி. இவர் அந்த ஊர் தபால் நிலையத்தில் போஸ்ட் மாஸ்டராக உள்ளார். சுமதியின் வீட்டின் ஒரு பகுதியில்தான் அந்த தபால் நிலையமும் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தபால் நிலையத்திற்குள் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரை அனுமதிக்காமல் தடுத்து வந்தார் சுமதி. தாழ்த்தப்பட்டவர்கள், வீட்டுக்கு வெளியே இருந்தபடிதான் ஸ்டாம்ப் போன்றவற்றை வாங்கிக் கொள்ள வேண்டுமாம்.
சுமதியின் இந்த அராஜகச் செயலைக் கண்டித்த பெரியார் திராவிடக் கழகத்தினர், சுமதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் தபால் நிலையத்திற்குள் தலித்துகள் புகும் போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்தது.
இந்த நிலையில், பாண்டியன் தெருவைச் சேர்ந்த பாலமுரளி என்பவர் மணி ஆர்டர் அனுப்ப தபால் நிலையத்திற்குச் சென்றார். அப்போது தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளே வரக் கூடாது என்று கூறி அவரை உள்ளே நுழைய அனுமதிக்க மறுத்துள்ளார்.
இதையடுத்து மதுக்கரை டி.எஸ்.பியிடம் புகார் கொடுத்தார் பாலமுரளி. அதன் பேரில் போலீஸார் தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து சுமதியைக் கைது செய்தனர்.
அதேசமயம், சுமதியும் போலீஸில் ஒரு புகார் கொடுத்தார். அதில், நான் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது பாண்டியன் தெருவைச் சேர்ந்த ராமலிங்கம், மணிகண்டன் உள்ளிட்ட 5 பேர் வந்து, ஒழுங்காக வேலை செய், இல்லாவிட்டால் கொளுத்தி விடுவோம் என மிரட்டிச் சென்றதாக குறிப்பிட்டிருந்தார்.
இந்தப் புகாரையும் ஏற்ற போலீஸார் அதன் பேரில், ராமலிங்கம், மணிகண்டன் உள்ளிட்ட 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இந்த சம்பவத்தால் திருமலையாம்பாளையம் கிராமத்தில் பரபரப்பு நிலவுகிறது.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
"22 வயதில் ஐபிஎஸ் - பஞ்சாப்பை சேர்ந்தவர்".. தமிழகத்தின் புதிய டிஜிபி மகேஷ் குமார் அகர்வால் யார்? பின்னணி -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்?












Click it and Unblock the Notifications