பிரதமர் வீட்டு முன்பு போராட்டம்- அச்சுதானந்தன் மிரட்டல்
வயநாடு (கேரளா):வெள்ள நிவாரண நிதி தொடர்பாக கேரளாவின் கோரிக்கையை மத்திய அரசு தொடர்ந்து அலட்சியப்படுத்தி வந்தால் பிரதமர் மன்மோகன் சிங் வீட்டு முன் போராட்டம் நடத்துவேன் என்று கேரள முதல்வர் அச்சுதானந்தன் மிரட்டியுள்ளார்.
கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் பருவ மழையால் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. சேத நிலவரங்களை நேரில் பார்க்க அங்கு வந்த அச்சுதானந்தன் செய்தியாளர்களிடம் பேசுகையில், வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு பெருமளவில் உதவி செய்ய வேண்டும் என கேரளா கோரியுள்ளது.
ஆனால் இந்தக் கோரிக்கை குறித்து மத்திய அரசு அலட்சியப் போக்குடன் நடந்து கொள்கிறது. இதுதொடர்பாக மத்திய அரசு கேரள அரசைத் தொடர்பு கொள்ளக் கூட இல்லை. இந்தப் போக்கு நீடித்தால், கேரளாவைச் சேர்ந்த எம்.பிக்களுடன் பிரதமர் இல்லம் முன்பு நான் போராட்டத்தில் குதிக்க வேண்டி வரும்.
வெள்ள நிவாரண நிதி தொடர்பாக கேரளாவின் கோரிக்கையை மத்திய அரசு கண்டுகொள்ளவே இல்லை. இது கண்டனத்துக்குரியது. சில மத்திய குழுக்கள் வந்து பார்த்துச் சென்றுள்ளன, அவ்வளவுதான். அதற்குப் பிறகு ஒன்றும் நடக்கவில்லை.
அணை கட்டாமல் விடமாட்டோம்:
முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்டியேத் தீருவோம். கேரள மாநிலத்தில் 4 மாவட்டங்களைச் சேர்ந்த 35 மக்களை காப்பாற்றுவதற்காகத் தான் நாங்கள் இந்த முயற்சியை எடுக்க உள்ளோம். தற்போதுள்ள அணை 111 ஆண்டுகள் பழமையானது.
அது மட்டுமல்லாது, தொடர்ந்து கேரளத்தின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து கொண்டிருப்பதால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.
அணையில் அதிகப்படியான நீர்வரத்தை இந்த பழமையான அணை தாங்காது. இந்த அணை எப்போது உடையும் என 4 மாவட்ட மக்களும் பயத்தில் இருக்கிறார்கள். ஏதாவது அப்படி ஒரு அசம்பாவிதம் நடந்து விட்டால் அதனுடைய விளைவு பயங்கரமானதாக இருக்கும்.
4 மாவட்டத்தில் வசிக்கும் மக்களின் நலன் கருதி கேரள அரசு, ரூ.300 கோடி மதிப்பீட்டில் புதிய அணை கட்டுவதற்கு திட்டத்தை தயாரித்துள்ளது. இந்த தொகையை மாநில அரசே ஏற்று செயல்படுத்தும். இதற்காக மத்திய அரசின் உதவியை கோர மாட்டோம். நிதிப் பற்றாக்குறை ஏற்பட்டால் கேரள மக்களிடம் வசூலித்து திட்டத்தை முழுமையடையச் செய்வோம்.
புதிய அணை தொடர்பான அனைத்துத் தகவல்களையும் மத்திய அரசுக்கு தெரிவித்து விட்டோம். நாங்கள் அணை கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது என்றார் அச்சுதானந்தன்.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள்












Click it and Unblock the Notifications