சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டு கடுங்காவல் சிறை:மும்பை தடா நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

Subscribe to Oneindia Tamil
Sanjay Dutt

மும்பை:மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ள நடிகர் சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

1993ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிபு வழக்கில் மொத்தம் 100 பேர் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். அவர்களில் சஞ்சய் தத்தும் ஒருவர்.

100 பேரில் இதுவரை 96 பேருக்கு தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டு விட்டது. சஞ்சய் தத், ருஸ்ஸி மல்லா, யூசுப் நுல்வல்லா, கெர்சி அட்ஜானியா ஆகிய நான்கு பேருக்கு இன்று மும்பை தடா நீதிமன்றம் தண்டனை விவரத்தை அறிவித்தது.

ஏகே-56 ரக துப்பாக்கியை பதுக்கி வைத்திருந்தது தான் சஞ்சய் தத் உள்ளிட்ட நான்கு பேர் மீதான குற்றச்சாட்டு ஆகும். நான்கு பேரும் ஆயுதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டிருந்தனர்.

இந் நிலையில் இன்று தீர்ப்பு வழங்கிய மும்பை தடா நீதிமன்றம் சஞ்சய் தத்துக்கு 6 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

இதையடுத்து அவரது ஜாமீன் ரத்து செய்யப்பட்டு நீதிமன்றத்தில் இருந்தே தத் நேரடியாக சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்படுவார்.

நீதிபதி பி.டி.கோடே தீர்ப்பை அறிவித்துப் பேசுகையில், நான்கு குற்றவாளிகளும் செய்துள்ள குற்றம் சாதாரணானதல்ல. பயங்கரவாத நடவடிக்கை. எனவே அவர்களுக்குத் தண்டனை வழங்காமல் இருக்க முடியாது.

குற்றவாளி ருஸ்ஸி மல்லா தாக்கல் செய்துள்ள நன்னடத்தை சான்றிதழ் ஏற்கப்படுகிறது. அவர் ஒரு வருடம் நீதிமன்றக் கண்காணிப்பில் வைக்கப்படுவார்.

குற்றவாளி ருஸ்ஸி மல்லா யூசுப் நுல்வல்லாவுக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. அவரது ஜாமீன் ரத்து செய்யப்படுகிறது.

சஞ்சய் தத்தின் நன்னடத்தை சான்றிதழை ஏற்க முடியாது. அவருக்கு 6 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்படுகிறது. அவரது ஜாமீனும் ரத்து செய்யப்படுகிறது.

அவரது தண்டனைக் காலத்தில் ஏற்கனவே அனுபவித்த 16 மாதங்களைக் கழித்துக் கொள்ள வேண்டும். (இதனால் 4 வருடம் 10 மாதம் தத் சிறையில் இருப்பார்)

கெர்சி அட்ஜானியாவுக்கு 2 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்படுகிறது என்று தனது தீர்ப்பில் தெரிவித்தார் நீதிபதி கோடே.

நீதிபதியிடம் கெஞ்சிய சஞ்சய் தத்

தீர்ப்பை நீதிபதி கோடே அறிவித்ததும் அதிர்ச்சி அடைந்த சஞ்சய் தத் நீதிபதியின் மேசை முன்பு சென்று கைகளை கூப்பியபடி சிறைக்குச் செல்ல கொஞ்சம் கால அவகாசம் தருமாறு கேட்டுக் கொண்டார். அப்போது அவரது கண்கள் கலங்கியிருந்தன. அவரது வக்கீல்களும் சஞ்சய் தத்தை சிறையில் அடைக்க கால அவகாசம் தருமாறு கோரினர்.

அதைக் கேட்ட நீதிபதி இதுகுறித்துப் பரிசீலித்து மாலை 3 மணிக்கு உத்தரவைத் தெரிவிப்பதாக கூறினார். அப்போது சஞ்சய் தத், அதுவரை என்னைச் சுற்றிலும் போலீஸார் நிற்பதற்குத் தடை விதிக்குமாறு கேட்டுக் கொண்டார். இதை ஏற்ற நீதிபதி, போலீஸார் நகருமாறு உத்தரவிட்டார்.

ஆனால் மாலையில் சஞ்சய் தத்தின் கோரிக்கையை நீதிபதி நிராகரித்தார். இதையடுத்து சஞ்சய் தத்தை சிறையில் அடைக்க போலீஸார் நடவடிக்கை எடுத்தனர்.

மகளிடம் போனில் அழுகை

தீர்ப்பு அறிவிக்கப்பட்டதும் அமெரிக்காவில் இருக்கும் தனது மகள் திரிஷலா தத்துடன் பேச அனுமதிக்க வேண்டும் என கோரினார் சஞ்சய் தத். அதற்கு நீதிபதி அனுமதி அளித்தார். இதையடுத்து செல்ேபான் மூலம் சஞ்சய் தத் தனது மகளிடம் பேசினார்.

இதைத் தொடர்ந்து அவரை போலீஸார் நீதிமன்றத்திலிருந்து சிறைக்கு அழைத்துச் சென்றனர். வேனில் அவரை போலீஸார் அழைத்துச் சென்றபோது நீதிமன்றத்திற்கு வெளியே கூடியிருந்த ரசிகர்கள், சஞ்சய் தத்தை நோக்கி சோகத்துடன் கையசைத்தனர். அதற்கு சஞ்சய் தத்தும் சோகமான முகத்துடன் கைகளை அசைத்தபடி சென்றார்.

இதற்கிடையே, தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யப் போவதாக சஞ்சய் தத்தின் வக்கீல்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தீர்ப்புடன் மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கு முடிவுக்கு வந்துள்ளது. குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 100 பேருக்கும் தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டு விட்டது.

மும்பை தொடர் குண்டுவெடிப்பில் இதுவரை 12 பேருக்கு மரண தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் அளிக்கப்பட்டுள்ளது.

மற்றவர்களுக்கு குறைந்தது 3 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 14 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று தீர்ப்பு வழங்கப்பட்டதையொட்டி மும்பையில் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+