கற்பழிக்க முயன்ற தந்தையை அம்மிக் கல்லால்அடித்து கொன்ற மகள்
மதுரை:பெற்ற தந்தையே கற்பழிக்க முயன்றதால் அதிர்ச்சி அடைந்த மகள் அம்மிக் கல்லால் தந்தையை தலையில் அடித்தும், கோடாரியால் வெட்டியும் கொலை செய்தார்.
மதுரை பெத்தானியாபுரம் மேட்டுத் தெருவில் வசித்து வந்தவர் சுப்புத் தேவர். கூலித் தொழிலாளியான இவர் எப்போதும் குடிபோதையில்தான் இருப்பார்.
இவருக்கு முத்தாலம்மா என்ற மனைவியும், மாலா என்ற மகளும் உள்ளனர்.
![]() |
மாலா தனது கணவருடன் கோபித்துக் கொண்டு தாய் வீட்டில் தங்கியிருந்தார். இந் நிலையில் இரவு மாலா வீட்டுக்குள்ளும், தாயும், தந்தையும் வீட்டுக்கு வெளியிலும் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தனர்.
நள்ளிரவில் எழுந்த சுப்புத் தேவர், மகள் தூங்கிக் கொண்டிருந்த அறைக்குள் நுழைந்தார். மகள் என்றும் பாராமல் அவரை பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இதைப் பார்த்து அதிர்ந்த மாலா, அருகே இருந்த அம்மிக் கல்லை எடுத்துத் தந்தையின் தலையில் சரமாரியாக அடித்துள்ளார்.
அப்படியும் ஆத்திரம் தீராமல் கோடாரியை எடுத்து சரமாரியாக வெட்டித் தள்ளினார். இதில் ரத்த வெள்ளத்தில் சுப்புத் தேவர் பிணமானார்.
பின்னர் தந்தையின் உடலை கட்டிலில் போட்டு விட்டு படுத்துக் ெகாண்டார்.
மறு நாள் காலை எழுந்த முத்தாலம்மா, கணவர் பிணமாகக் கிடந்ததைப் பார்த்து அதிர்ந்தார். போலீஸாருக்குத் தகவல் போனது.
அவர்கள் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். போலீஸ் துப்பறியும் நாய், மாலாவிடம் போய் நின்று அவரது சேலையைக் கவ்வியது.
இதையடுத்து மாலாவிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது அவர் உண்மையைக் கூறி கதறி அழுதார்.
3 மாதத்திற்கு முன்பே சுப்புத் தேவர் மாலாவிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதுகுறித்து தாயாரிடம் தெரிவித்துள்ளார் மாலா. ஆனால் முத்தாலம்மா அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் விட்டுவிட்டார்.
மாலாைவப் போலீஸார் கைது செய்து, சுப்புத் தேவரின் உடலை பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழ்நாட்டில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட புதிய டேட்டா -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்!













Click it and Unblock the Notifications