தமிழகத்தில் 11 எம்.பி தொகுதிகள் மாற்றம்:பல எம்.எல்.ஏ தொகுதிகளும் காலி
சென்னை:தமிழகத்தில் உள்ள 39 எம்.பி தொகுதிகளில் 11 தொகுதிகளின் எல்லைகள் மாற்றி அமைக்கப்படுகின்றன..
அதே போல பல எம்.எல்.ஏ தொகுதிகள் நீக்கப்பட்டு அவற்றுக்குப் பதில் புதிய தொகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 234 ஆகவே நீடிக்கிறது.
நாடு முழுவதும் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை மறு சீரமைப்பு செய்ய குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு மாநிலங்களுக்குச் சென்று புதிய தொகுதி மறு சீரமைப்பு தொடர்பாக அரசியல் கட்சிகள் உள்பட பல்வேறு தரப்பினரிடமிருந்து கருத்துக்களைக் கேட்டறிந்தது.
அதன் அடிப்படையில் தற்போது தொகுதிகள் மறு சீரமைப்பு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தைப் பொருத்தவரை மொத்தம் 234 சட்டசபைத் தொதிகளும், 39 நாடாளுமன்றத் தொகுதிகளும் உள்ளன.
இவற்றின் எண்ணிக்கையை மாற்றாமல், பல தொகுதிகளின் எல்லைகளை மட்டும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன.
நாடாளுமன்றத் தொகுதிகளைப் பொருத்தவரை 11 தொகுதிகள் மாற்றப்பட்டுள்ளன. அவற்றுக்குப் பதில் புதிய ெதாகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
சட்டமன்ற தொகுதிகள் நீக்கம்-பெயர்கள் மாற்றம்:
இதேபோல பல சட்டசபைத் தொதிகள் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளன, சில தொகுதிகள் நீக்கப்பட்டுள்ளன.
சில தொகுதிகளின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
ஒரு சட்டசபைத் தொகுதிக்கு 2 லட்சத்து 66 ஆயிரத்து 691 பேர் என்ற கணக்கில் தொகுதிகள் மாற்றிப் பிரிக்கப்பட்டுள்ளன.
11 புதிய 11 எம்.பி. தொகுதிகள்:
காஞ்சிபுரம் (தனி), திருவண்ணாமலை, திருவள்ளூர் (தனி), ஆரணி, விழுப்புரம் (தனி), கள்ளக்குறிச்சி (தனி), நாமக்கல், ஈரோடு, தேனி, தூத்துக்குடி, கன்னியாகுமரி.
நீக்கப்பட்ட எம்பி தொகுதிகள்:
இந்தத் தொகுதிகளுக்குப் பதில் நீக்கப்பட்ட 11 தொகுதிகள்
செங்கல்பட்டு, திருப்பத்தூர், வந்தவாசி, திண்டிவனம், ராசிபுரம், திருச்செங்கோடு, பழனி, பெரியகுளம், மயிலாடுதுறை, திருச்செந்தூர், நாகர்கோவில் ஆகியவை.
சென்னை நகரில் 2 புது தொகுதிகள்:
சென்னையில் உள்ள தென் சென்னை, மத்திய சென்னை, வட சென்னை தொகுதிகளின் பெயர்களில் மாற்றம் இல்லை. ஆனால் அந்தத் தொகுதிகளுக்குட்பட்ட சட்டசபைத் தொகுதிகளில் பெரும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை நகருக்குள் புதிதாக 2 தொகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
தென் சென்னை தொகுதியில் இதுவரை தி.நகர், திருவல்லிக்கேணி, தாம்பரம், சைதாப்பேட்டை, ஆலந்தூர், மயிலாப்பூர் ஆகிய தொகுதிகள் இருந்தன.
மத்திய சென்னையில், பூங்கா நகர், சேப்பாக்கம், புரசைவாக்கம், எழும்பூர், ஆயிரம் விளக்கு, அண்ணா நகர் ஆகிய தொகுதிகள் இருந்தன.
வட சென்னையில், ராயபுரம், துறைமுகம், ஆர்.கே.நகர், பெரம்பூர், திருவொற்றியூர், வில்லிவாக்கம் ஆகிய தொகுதிகள் இருந்தன.
தற்போது இவற்றில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தென் சென்னை தொகுதிகள்:
அதன்படி தென் சென்னையில் இனி தி.நகர், மைலாப்பூர், சைதாப்பேட்டை, ஆயிரம் விளக்கு, வேளச்சேரி, விருகம்பாக்கம் ஆகிய தொகுதிகள் இடம் பெறும்.
இதில் வேளச்சேரி, விருகம்பாக்கம் ஆகியவை புதிதாக உருவாக்கப்பட்டுள்ள தொகுதிகள்.
வட சென்னை:
வட சென்னையில் இனிமேல் இடம் பெறப் போகும் தொகுதிகள்- மாதவரம், பூங்கா நகர், ராயபுரம், பெரம்பூர், ஆர்.கே.நகர், திருவொற்றியூர் ஆகியவை.
மத்திய சென்னை:
மத்திய சென்னை தொகுதியில் இனி இடம் பெறப் போம் தொகுதிகள் - புரசைவாக்கம், வில்லிவாக்கம், எழும்பூர், துறைமுகம், சேப்பாக்கம், அண்ணா நகர் ஆகியவை.
சென்னை நகரில் 15 தொகுதிகள் முன்பு இருந்தன. தற்போது இவற்றின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. புதிகாக விருகம்பாக்கம், வேளச்சேரி ஆகியவை உருவாகியுள்ளன. மாதவரம் மட்டும் புறநகர் தொகுதியாகும்.
அதிமுக - திமுகவுக்கு ஆப்பு:
வில்லிவாக்கம் தொகுதியைப் பிரித்துத்தான் தற்போது விருகம்பாக்கம், ஆவடி, அம்பத்தூர் என மூன்று தொகுதிகளை உருவாக்கியுள்ளனர்.
ஆனால், வில்லிவாக்கத்தைப் பிரிக்கும்போது எம்.ஜி.ஆர். நகர் என புதிய தொகுதியாக உருவாக்க அதிமுக கோரி வந்தது. அதேபோல கே.கே.நகர் என புதிய தொகுதியை உருவாக்க திமுக கோரியது.
ஆனால், இருவரது கோரிக்கையையும் தூக்கி கிடப்பில் போட்ட தேர்தல் ஆணையம் தற்போது விருகம்பாக்கத்தை தனித் தொகுதியாக அறிவித்து விட்டது.
மேலும் இதுவரை இருந்து வந்த திருவல்லிக்கேணி, ஆலந்தூர் ஆகிய தொகுதிகள் இனி இருக்காது.
தென் சென்னை எம்.பி தொகுதி:
மேலும் தென் சென்னை எம்.பி தொகுதியில் இதுவரை இருந்து வந்த தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் இனி தாம்பரம், சோழிங்கநல்லூர், ஸ்ரீபெரும்புதூர் (தனி), பல்லாவரம், மதுரவாயல் உள்ளிட்ட தொகுதிகள் இடம் பெறும்.
திருவள்ளூர் தொகுதியில் ஆவடி, அம்பத்தூர், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருவள்ளூர், திருவாலங்காடு ஆகிய தொகுதிகள் இடம் பெறுகின்றன.
மதுரை:
அதே போல மதுரை எம்.பி தொகுதியிலும் மாற்றம் செய்யப்படுகிறது.
மதுரை மக்களவைத் தொகுதியில் இதுவரை இருந்து வந்த சேடபட்டி, சோழவந்தான் ஆகியவை நீக்கப்பட்டு விட்டன. இனிமேல் மதுரை தொகுதியில் மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, மதுரை மத்தி, மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மேலூர் ஆகியவை இடம் பெறும்.
ஓ.பி தொகுதிக்கு ஆப்பு:
இதேபோல தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் தொகுதி தூக்கப்பட்டு தேனி எம்.பி தொகுதியாகியுள்ளது.
அத்தொகுதியில், சமயநல்லூர் (தனி), உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம் (தனி), போடி, கம்பம் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.
பெரியகுளம் ரிசர்வ் தொகுதி ஆகிவிட்டதால் இனி பன்னீர் அங்கு போட்டியிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
திண்டுக்கல் எம்.பி. தொகுதியில், பழனி, ஓட்டன்சத்திரம், ஆத்தூர், நிலக்கோடேடை (தனி), திண்டுக்கல், நத்தம் ஆகியவை இனி இருக்கும்.
சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை இருந்து வந்த இளையாங்குடி தொகுதி நீக்கப்பட்டு விட்டது. சிவகங்கை எம்.பி தொகுதியில் புதிதாக ஆலங்குடி, அறந்தாங்கி ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.
ராமநாதபுரம் மாவட்டத்தில் முதுகுளத்தூர் சட்டசபைத் தொகுதி நீக்கப்பட்டு விட்டது.
விருதுநகர் மாவட்டத்தில் காரியாபட்டி, திருச்சுழி ஆகியவை புதிய சட்டசபைத் தொகுதிகளாக மாறியுள்ளன. சிவகாசி எம்.பி. தொகுதியில் இருந்து வந்த ராஜபாளையம், சாத்தூர் ஆகியவை தென்காசி எம்.பி. தொகுதிக்குப் ேபாய் விட்டன.
நெல்லை மாவட்டம் சாத்தான்குளம் சட்டசபைத் தொகுதி முற்றிலும் கலைக்கப்பட்டு அதன் கீழ் வந்த பகுதிகள் ஆலங்குளம் மற்றும் அம்பாசமுத்திரம் தொகுதிகளுடன் சேர்க்கப்பட்டு விட்டன.
தொகுதிகள் சீரமைக்கப்பட்டு அதுதொதாடர்பான பட்டியல் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஒப்புதல் கிடைத்த பின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.
-
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
பாஜக விரிக்கும் '60 சீட்' வலை.. விஜயுடன் டெல்லி கடைசி கட்டப் பேச்சுவார்த்தை.. உறுதியாகும் கூட்டணி? -
மகாபலிபுரம் டூ எண்ணூர்.. இந்தியாவின் மிக முக்கிய ரோடு.. மின்னல் வேகத்தில் தயார் ஆகும் 10 வழிச் சாலை -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. குமரி, நீலகிரியில் இன்று விட்டு விளாசப் போகுது மழை! வானிலை மையம் ஜில் அப்டேட்! -
சென்னை - அரக்கோணம் மின்சார ரயில் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி.. கோடை காலத்தில் இனி நிம்மதியாக போலாம் -
வேலூரில் 100 டிகிரியை தொட்ட வெயில்.. பாலாறு உருகிடுச்சி! மக்கள் பாதிப்பு! -
தமிழகத்திலிருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும்.. போட்டியின்றி தேர்வு! -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை.. சென்னையிலேயே பணியிடம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர்












Click it and Unblock the Notifications