பயனாளர் திருப்தி-கூகுளை மிஞ்சிய யாஹூ!

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்:இன்டர்நெட் பயனாளிகளின் தேவகளை முழுமையாக பூர்த்தி செய்யும் தளம் என்ற பெருமை யாஹுவுக்குக் கிடைத்துள்ளது. இந்த விஷயத்தில் கூகுளை அது மிஞ்சியுள்ளது.

இதுகுறித்து மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் அமெரிக்க வாடிக்கையாளர் திருப்தி ஆய்வில் தெரிய வந்துள்ள தகவல்கள் வருமாறு

yahoo

யாஹூ தளத்தின் வாடிக்கையாளர் திருப்தி மதிப்பீடு 3.9 சதவீதம் உயர்ந்துள்ளது. 100 புள்ளிகளுக்கு 79 புள்ளிகளை யாஹூ பெறுகிறது. கூகுளுக்கு 78 புள்ளிகள் கிடைத்துள்ளன.

வெப் சர்ச் என்ஜினைப் பொத்தவரை கூகுள்தான் பிரதான தளமாக உள்ளது. அதேசமயம், இமெயில் உள்ளிட்ட பிற பிரிவுகளில் யாஹு மேலோங்கியுள்ளது.

Google

யாஹூ தளத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல மாற்றங்கள் இன்டர்நெட் உபயோகிப்பாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளதாகவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அதேசமயம், சர்ச் என்ஜினைப் பொறுத்தவரை கூகுளே முன்னணியில் உள்ளது. ஆனால் கூகுள் தளம் உருவாக்கிய இமெயில், சாட் வசதி உள்ளிட்டவை வாடிக்கையாளர்களை வெகுவாக கவரவில்லையாம். இதை சரியான முறையில் மார்க்கெட்டிங் செய்தால் தேற முடியும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்க்.காம் தளத்திற்கு வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் வாடிக்கையாளர் திருப்தி மதிப்பெண் 75 புள்ளிகளாக உள்ளது.

45 நிறுவனங்களைச் சேர்ந்த 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களை வைத்து இந்த ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+