கபிலுக்கு பதிலடி: கவாஸ்கர் தலைமையில்பிசிசிஐ உருவாக்கும் பி.சி.எல்!
மும்பை:கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் லீக்குக்குப் போட்டியாக, இந்திய கிரிக்கெட் வாரியம் கவாஸ்கரைத் தலைவராகக் கொண்ட புரபஷனல் கிரிக்கெட் லீக் என்ற போட்டி அமைப்பை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த லீக்கில் விளையாடும் வீரர்களுக்குப் பெரும் தொகையை அள்ளிக் கொடுக்கவும் கிரிக்கெட் வாரியம் தீர்மானித்துள்ளது.
இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான சுபாஷ் சந்திரா உருவாக்கியுள்ள அமைப்புதான் ஐசிஎல் எனப்படும் இந்திய கிரிக்கெட் லீக். இந்த அமைப்பின் தலைவராக கபில்தேவ் உள்ளார். பெரும் பணம் கொடுத்து பல்வேறு கிரிக்கெட் வீரர்களை இந்த அமைப்பு சேர்த்து வருகிறது.
பாகிஸ்தான், மேற்கு இந்தியத் தீவுகள், நியூசிலாந்து, ஆஸ்திரேலிய நாட்டு வீரர்கள் இந்த அமைப்பில் இணைந்துள்ளனர். இந்திய அணியில் இடம் பெற காத்திருந்து, காத்திருந்து வீணாகிக் கொண்டிருக்கும் ஏராளமான இளம் வீரர்களும் இந்த அணியில் இணைந்து கொண்டிருக்கின்றனர்.
இதனால் ஆத்திரமடைந்த இந்திய கிரிக்கெட் வாரியம் கபில் தேவை தேசிய கிரிக்கெட் அகாடமி தலைவர் பதவியிலிருந்தும், முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிரசன்னாவை, சுழற்பந்து பயிற்சியாளர் பதவியிலிருந்தும் நீக்கியது.
இந்த நிலையில் கபில்தேவ் தலைமையிலான அமைப்புக்குப் போட்டியாக தானும் ஒரு அமைப்பை கிரிக்கெட் வாரியம் தொடங்கத் திட்டமிட்டுள்ளது. இந்த அமைப்புக்கு புரபஷனல் கிரிக்கெட் லீக் என்று பெயரிடப்படவுள்ளது.
இந்த அமைப்புக்கு கவாஸ்கர் தலைவராக நியமிக்கப்படக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அமைப்பில் சர்வதேச வீரர்கள் பலர் இடம் பெறுவார்கள். இந்த அமைப்பின் சார்பில் உருவாக்கப்படும் அணிகளில் சர்வதேச வீரர்களுடன், இந்திய அணி வீரர்கள், வளரும் வீரர்கள் என அனைவரும் இடம் பெற்றிருப்பார்கள்.
20-20 ஓவர்கள் அடிப்படையில் போட்டிகள் நடைபெறும். இந்திய ஹாக்கி சங்கத்தின் சார்பில் உள்ள பிரீமியர் ஹாக்கி லீக் போல இந்த பிசிஎல் செயல்படும்.
புதிய திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாநில கிரிக்கெட் சங்கமும் ஒரு அணியை உருவாக்க வேண்டும். அதில் சர்வதேச வீரர்கள், தேசிய வீரர்கள், இளம் வீரர்கள் சரி விகிதத்தில் இடம் பெறுவர்.
ஒவ்வொரு அணிக்கும் ஒரு ஸ்பான்சர் இருப்பார். ஐந்து ஆண்டு காண்டிராக்ட் அடிப்படையில் விளம்பரதாரர் ஒப்பந்தம் செய்யப்படுவார். அந்த அணி முழுச் செலவுக்கும் அந்த ஸ்பான்சரே பொறுப்பு.
பிசிஎல் போட்டிகளை நேரடியாக ஒளிபரப்பும் உரிமை பெரும் தொைகக்கு ஏலம் மூலம் டிவி நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.
கிரிக்கெட் வாரியத்தின் இந்தத் திட்டம் குறித்து கிரிக்கெட் வாரியத் துணைத் தலைவர் லலித் மோடி கூறுகையில், இதுகுறித்து யோசிக்கப்பட்டுள்ளது. இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. பொதுக்குழுக் கூட்டத்திலும் விவாதிக்கப்படவில்லை.
இது தொடர்பாக கவாஸ்கருக்கு இ-மெயில் அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் அவரிடமிருந்து இன்னும் பதில் வரவில்லை. சுபாஷ் சந்திராவின் ஐசிஎல் அமைப்பு வெகு நாட்களுக்கு நீடிக்காது. கபில்தேவ் பற்றி நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை என்றார்.
கவாஸ்கரும், கபில்தேவும் கிரிக்கெட் விளையாடிய காலத்திலேயே இருவரும் எலியும், பூனையுமாக இருப்பார்கள். குறிப்பாக கபில்தேவ் கேப்டனாக இருந்தபோது அவருக்கு சரியாக ஒத்துழைப்பு கொடுக்காதவர் கவாஸ்கர் என்ற குற்றச்சாட்டு உண்டு. இந்த நிலையில் போட்டி அமைப்புகளுக்கு இருவரும் தலைவர்களாக செயல்பட்டால், அவர்களது போட்டியின் 2வது இன்னிங்ஸாகவே அது இருக்கும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் கருதுகிறார்கள்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications