சேலத்தில் திமுக-பாமகவினர் நடுரோட்டில் அடிதடிபஸ்கள் சேதம், கடைகள் அடைப்பு
சேலம்:சேலம் அருகே இடைப்பாடியில் திமுக, பாமக தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு அந்த வழியே வந்த பஸ்களையும் தாக்கி கண்ணாடிகளை உடைத்து சேதப்படுத்தினர்.
இந்த அடிதடியில் 20 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
அடுத்த மாதம் தமிழக முதல்வர் கருணாநிதியும் மற்றும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசும் இடைப்பாடிக்கு வரவுள்ளனர். இருவரும் வெவ்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இரு வேறு தேதிகளில் அங்கு வருகின்றனர்.
இதையொட்டி தங்களது தலைவர்களை வரவேற்க சுவர்களில் வரவேற்பு விளம்பரங்கள் எழுதி வருகின்றனர் திமுகவினரும் பாமகவினரும்.
பஸ் நிலையம் அருகே உள்ள நகராட்சிப் பள்ளி கம்பவுண்ட் சுவரில் விளம்பரம் எழுத இரு தரப்பும் இடம் பிடிக்க முயன்றனர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதமும் அடிதடியும் ஏற்பட்டது.
ஒருவரை ஒருவர் விரட்டி விரட்டி அடித்துக் ெகாண்ட தொண்டர்களில் பலருக்கு சட்டை, வேஷ்டிகள் கிழிந்தன. இந்த மோதலால் அப்பகுதியில் கடைகள் அடைக்கப்பட்டன. அவ்வழியே வந்த பஸ்களின் கண்ணாடிகளையும் இக் கும்பல் உடைத்தது.
காயமடைந்த பா.ம.கவினர் சேலம் அரசு மருத்துவமனையிலும், திமுகவினர் இடைப்பாடி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.
சேலம் பகுதியில் ஏற்கனவே பாமகவினருக்கும் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. இந் நிலையில் அந்த மோதல் இப்போது அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications