மான் வேட்டை: சல்மான் கானுக்கு 5 வருட சிறை உறுதியானது
ஜோத்பூர் (ராஜஸ்தான்):சிங்காரா ரக மான்களை வேட்டையாடிய வழக்கில் நடிகர் சல்மான் கானுக்கு விதிக்கப்பட்ட 5 ஆண்டு சிறைத் தண்டனையை ஜோத்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் உறுதி செய்தது. மேலும் உடனடியாக அவர் கோர்ட்டில் சரணடையுமாறும் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து சல்மான் கான் சிறையில் அடைக்கப்படுகிறார்.
![]() |
1998ம் ஆண்டு ஹம் சாத் சாத் ஹைன் என்ற படத்தின் சூட்டிங்குக்காக ராஜஸ்தான் வந்த காட்டுப் பகுதியில் வேட்டையில் இறங்கினார் சல்மான். அரிய ரக மான்களை அவர் வேட்டையாடி கொன்றார்.
இந்த வழக்கில் கடந்த ஆண்டு அவருக்கு 5 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து சல்மான் கைது செய்யப்பட்டு 3 நாட்கள் ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த சல்மான் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து ஜோத்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த ஜோத்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. அப்போது சல்மான் கானின் அப்பீல் மனுவைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம், அவருக்கு வழங்கப்பட்ட 5 ஆண்டு சிறைத் தண்டனையை உறுதி செய்தது. அவருக்கு வழங்கப்பட்ட ஜாமீனையும் ரத்து செய்தது. அவர் உடனடியாக நீதிமன்றத்தில் சரணடைய வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
அப்பீல் மனு மீதான தீர்ப்பு அளிக்கப்பட்டபோது சல்மான் கான் கோர்ட்டுக்கு வரவில்லை. இந்தத் தீர்ப்பை எதிர்த்து சல்மான் கான் ஜெய்ப்பூர் உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்யலாம்.
இருப்பினும் நாளையும், நாளை மறுநாளும் உயர்நீதிமன்றத்திற்கு விடுமுறை என்பதால் ஜாமீன் கோரிக் கூட மனு தாக்கல் செய்ய முடியாது என்பதால் சல்மான் கான் சிறையில் அடைக்கப்படுவது உறுதியாகியுள்ளது.
இதையடுத்து அவர் எங்கிருந்தாலும் கைது செய்யப்படுவார் அல்லது அவரே நீதிமன்றத்தில் சரணடையலாம்.
சமீபத்தில்தான் சஞ்சய் தத்துக்கு மும்பை குண்டுவெடிப்பு வழக்கில் 6 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட அவர் நேற்றுதான் இடைக்கால ஜாமீனில் விடுதலையாகி வந்தார். இந்த நிலையில் சல்மான் கானுக்கு சிறைத் தண்டனை உறுதி செய்யப்பட்டிருப்பது பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சல்மான் கான் தற்போது நடித்து வரும் போக்கிரி ரீமேக் உள்ளிட்ட பல படங்கள் பாதிக்கப்படும் அபாயமும் எழுந்துள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!













Click it and Unblock the Notifications