சேலம், கோவை, நெல்லையில் நாளை முதல்கேரள ரயில்கள் மறியல்

Subscribe to Oneindia Tamil

சேலம்&கோவை:சேலம் ரயில்வே கோட்டத்தை திட்டமிட்டபடி 14ம் தேதி துவங்க வலியுறுத்தி கோவை ரயில் நிலையத்தில் நாளை காலை முதல் கேரள ரயில்களை மறிக்கும் காலவரையற்ற பேராட்டத்தை நடத்துவது என கோவையில் நேற்றிரவு நடந்த அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதே கோரிக்கையை வலியுறுத்து சேலம், நெல்லையிலும் நாளை கேரள ரயில்களை மறிக்கும் போராட்டம் நடைபெறவுள்ளது.

முன்னதாக நாளை (25ம் தேதி) காலை முதல் சேலம் வழியாக செல்லும் அனைத்து கேரள ரயில்களும் மறிக்கப்படும், இரவிலும் இந்தப் பேராட்டம் நடக்கும் என வேளாண்மைத் துறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் அறிவித்திருந்தார்.

கோவையில் காலவரையற்ற போராட்டம்:

இந் நிலையில் பெரியார் திராவிட கழக பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமையிலான சேலம் ரயில்வே கோட்ட பாதுகாப்பு போராட்ட ஒருங்கிணைப்பு குழுவின் சார்பில் சர்வக் கட்சி கூட்டம் கோவையில் நடைபெற்றது.

அதில், சேலம் ரயில்வே கோட்டத்தை திட்டமிட்டபடி செப்டம்பர் 14ம் தேதி ஆரம்பிக்க வேண்டும் என வலியுறுத்தி நாளை காலை கோவையிலும் அனைத்து கட்சி சார்பில் முதல் காலவரையறையற்ற கேரள ரயில்களை மறிக்கும் போராட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நெல்லையிலும் ரயில் மறியல்:

அதே போல நெல்லையிலும் ரயில்களை மறிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

நெல்லை மாநகராட்சி மண்டல தலைவர் சுப. சீதாராமன் தனது அறிக்கையில் கூறியுள்ளதாவது,

சேலம் ரயில்வே கோட்டம் அமையவிருப்பதை கேரள முதல்வரும் அங்குள்ள அமைச்சர்களும் தடுக்க முயற்சி செய்து வருகிறார்கள்.

மத்திய ரயில்வே அமைச்சர் லாலுவும், இணை அமைச்சர் வேலுவும் தமிழ்நாட்டில் ஒரு மாதிரியாகவும், கேரள முதல்வர் மற்றும் அம்மாநில எம்பிக்களிடம் வேறு மாதிரியாகவும் பேசி நம்மை குழப்பி வருகிறார்கள்.

இரட்டை நாக்கு படைத்த லாலுவையும், கேரள முதல்வர் அச்சுதானந்தனையும் கண்டித்து சென்னையில் இருந்து நெல்லை வழியாக கேரளா செல்லும் அனைத்து ரயில்களையும் தடுத்து மறியல் செய்வோம் என்று தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

ஓணம்-பாதிக்கப்படும் கேரள மக்கள்:

பல வெளிமாநிலங்களில் இருக்கும் கேரள மக்கள் தங்களுடைய ஓணம் பண்டிகைக்காக கேரளாவுக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

இந் நிலையில் நாளை நடக்கவுள்ள ரயில் மறியல் போராட்டத்தால் ஓணம் பண்டிகைக்கு தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் கண்டிப்பாக கேரள பயணிகள் பாதிக்கப்படுவார்கள்.

கேரள ரயில்கள் ரத்தாகுமா?:

இதற்கிடையே நாளை சேலம், கோயம்புத்தூர், திருநெல்வேலியில் நடத்தப்படும் ரயில் மறியலால் அந்த வழியாக கேரளாவிற்கு செல்லும் அனைத்து ரயில்களும் ரத்து செய்யப்படும் என்று தெரிகிறது.

அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து போராட்டம் நடத்துவதால், பொது மக்களின் பாதுகாப்பு கருதி சேலம் வழியாக செல்லும் கேரள ரயில்களை ரத்து செய்வதா என்று ரயில்வேத்துறை அதிகாரிகள் ஆலோசனை செய்து வருகிறார்கள்.

இதனால் நாளை பகல் நேரங்களில் சென்னையிலிருந்து கேரளாவிற்கு புறப்படும் ரயில்கள் மற்றும் திருவனந்தபுரம், மங்களூர், கன்னியாகுமரி, ஆகிய இடங்களிலிருந்து புறப்படும் ரயில்கள் நிறுத்தப்படலாம் என்று தெரிகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+