திரும்பி வருகிறார் நவாஸ் ஷெரீப்:முஷாரப்புக்கு அடுத்த நெருக்கடி ஆரம்பம்
இஸ்லாமாபாத்:அதிபர் பர்வேஸ் முஷாரபின் மிரட்டலையும் மீறி பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் நாடு திரும்ப முடிவு செய்துள்ளார்.
ஷெரீப் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு ஆட்சிக்கு வந்த முஷாரப் ஷெரீப்பை குடும்பத்தோடு சிறையில் அடைத்தார். இதையடுத்து செளதி அரபியாவின் தலையீட்டால் ஷெரீபுக்கு விடுதலை கிடைத்தது.
இதையடுத்து நாடு கடத்தப்பட்ட ஷெரீபுக்கு செளதி அரசு தான் அடைக்கலம் தந்தது.
இப்போது அங்கு வசித்து வரும் ஷெரீப் பாகிஸ்தான் திரும்ப முடிவு செய்துள்ளார்.
சமீபகாலமாக ஏகப்பட்ட பிரச்சனைகளில் சிக்கியுள்ள முஷாரப், முன்னாள் பிரதமர் பெனாசிர் புட்டோவுடன் கைகோர்க்க முடிவு செய்தார்.
ஆனால், அவருடன் கைகோர்த்தால் தனது அரசியல் எதிர்காலம் பாழாகிவிடும் என்பதால் புட்டோ ஒதுங்கிவிட்டார்.
இந் நிலையில் பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்திற்கும் முஷாரபுக்கும் ேமாதல் ஏற்பட்டது.
முஷாரப் நீக்கிய தலைமை நீதிபதி இப்திகார் செளத்ரியை மீண்டும் பதவியில் நியமித்தது உச்ச நீதிமன்றம். அதை தடுக்க முஷாரபால் முடியவில்லை.
இந் நிலையில் தன்னை நாடு திரும்ப அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் ஷெரீப் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி அவரை நாடு திரும்ப அனுமதித்தார்.
மேலும் ஷெரீப் நாடு திரும்புவதைத் தடுக்க முஷாரபுக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றும் தீர்ப்பளித்தார்.
இதையடுத்து நாடு திரும்ப ஷெரீப் தயாராகி வருகிறார். ஆனால், மீண்டும் நாட்டுக்குள் வரக் கூடாது, அரசியலில் நேரடியாக ஈடுபடக் கூடாது என்ற நிபந்தனையுடன் தான் ஷெரீபுக்கு மன்னிப்பும் விடுதலையும் தரப்பட்டது.
அதை மீறி நாட்டுக்குள் நுழைந்தால் அந்த பொது மன்னிப்பு ரத்தாகிவிடும். மீண்டும் சிறையில் அடைக்கப்படுவார் என முஷாரப் அரசு ஷெரீப்புக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆனால், மாறிவிட்ட உலகச் சூழலில் ஷெரீப்பை முஷாரப் மீண்டும் கைது செய்வதை அமெரிக்காவால் அனுமதிக்க முடியாத நிலை உள்ளது.
தான் கைதானால் அமெரிக்காவின் பெயர் கெடும் என்ற நம்பிக்கையோடு சில நாட்களில் மீண்டும் பாகிஸ்தானில் நுழைய திட்டமிட்டுள்ளார் ஷெரீப்.
பாகிஸ்தானில் நடந்து வரும் சர்வாதிகார ஆட்சிக்கு விரைவில் முடிவு கட்டப்படும் என்றும் நவாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.
நவாஸின் வருகையை அவரது கட்சியினரும் ஆதரவாளர்களும் பாகிஸ்தானில் இனிப்பு வழங்கி கொண்டாட ஆரம்பித்துள்ளனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications