ஊராட்சி தலைவர்களை தடுக்கும் சக்திகள்மீது மிசா சட்டம் பாயும்: ஸ்டாலின்
விருதுநகர்:ஊராட்சித் தலைவர்களை செயல்பட விடாமல் தடுக்கும் ஆதிக்க சக்திகள் மீது மிசா சட்டம் பாயும் என உள்ளட்சித்துறை அமைச்சர் ஸ்டாலின் கூறினார்.
தென் மாவட்ட ஊராட்சி தலைவர்களுக்கான மண்டல மாநாடு விருதுநகரில் நடந்தது. இதில் உள்ளாட்சித் துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின், விருதுநகர் மாவட்ட கலெக்டர் சந்திரசேகரன், அமைச்சர்கள் சாத்தூர் ராமசந்திரன், சுப.தங்கவேலன், தங்கம் தென்னரசு மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஸ்டாலின் பேசுகையில்,
அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி துறையே ஒட்டுமொத்தமாக அலட்சியப்படுத்தப்பட்டது. ஆனால், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஊராட்சிகளுக்கான அதிகாரங்களை, சலுகைகளை உடனே வழங்க முதல்வர் உத்தரவிட்டார்.
காசோலைகளில் கையெழுத்து இடும் அதிகாரம் உங்களுக்கு உரியது. அதை தட்டி பறிக்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது. ஜனாதிபதி, முதல்வருக்கு கூட கிடையாது. கையெழுத்து இடுவதில் பிரச்சனை ஏற்பட்டால் கலெக்டரிடம் முறையிட்டு தீர்வு காணலாம். அல்லது கவுன்சில் கூட்டத்தை கூட்டி திர்த்து கொள்ளலாம்.
ஊராட்சித் தலைவர்களை செயல்படாமல் தடுக்கும் ஆதிக்க சக்திகள் மீது மிசா சட்டம் பாயும். அதற்கான உத்தரவை முதல்வர் வழங்கியுள்ளார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications