காவல்துறையை எதிர்த்து போராட்டம்-திருமாவளவன்
திட்டக்குடி:விடுதலை சிறுத்தைகளின் முன்னணி பொறுப்பாளர்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளதாகக் காவல்துறையை எதிர்த்து போராட்டம் நடத்தப் போவதாக விடுதலை அக் கட்சியின் பொதுச் செயலாளர் திருமாவளவன் கூறியுள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் கடந்த வாரம் பாமக-விடுதலை சிறுத்தைகள் இடையே கடும் மோதல் நடந்தது. இந் நிலையில் நிருபர்களிடம் திருமா கூறியதாவது,
கடலூர் மாவட்டத்தில் கடந்த வாரம் நடந்த மோதலில் காவல்துறை ஒருதலைப்பட்சமாக நடவடிக்கை எடுத்துள்ளது. இதை வன்மையாக கண்டிக்கிறேன். இந்த சம்பவம் தொடர்பாக விடுதலை சிறுத்தைகளின் முன்னணி பொறுப்பாளர்கள் மீது பொய் வழக்கு போட்டுள்ளார்கள். எங்கள் தொண்டர்களை தாக்கியவர்களை விட்டுவிட்டனர்.
இதுகுறித்து நான் தமிழக முதல்வர் மற்றும் போலீஸ் டிஜிபியிடம் பேசியுள்ளேன். இந்த சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் காவல்துறையை எதிர்த்து போராட்டம் நடத்துவோம்.
அதே போல் நெய்வேலி ஒப்பந்த தொழிலாளர்கள் பிரச்சனைக்கு விடுதலை சிறுத்தைகள் சங்கமும், தாழ்த்தப்பட்ட பணியாளர்கள் சங்கமும் இணைந்து குரல் கொடுக்கும். இது தொடர்பாக அறவழிப் போராட்டமும் நடைபெறும் என்றார்.












Click it and Unblock the Notifications