மகா சக்திகள்- சோனியாவுக்கு 6வது இடம்!
நியூயார்க்:உலகின் அதிக சக்தி வாய்ந்த பெண்மணிகளில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு 6வது இடம் கிடைத்துள்ளது. பிரதீபா பாட்டீலை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்து அவரை வெற்றியும் பெற வைத்த செயலால் அவர் முதல் பத்து இடங்களுக்குள் முன்னேறியுள்ளார்.
![]() |
பிரபல ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை உலகின் சக்தி வாய்ந்த 100 பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் 2வது ஆண்டாக ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி 6வது இடத்தைப் பெற்றுள்ளார். அமெரிக்க முன்னாள் அதிபர் ஹில்லாரி கிளிண்டன், அதிபர் புஷ்ஷின் மனைவி லாரா ஆகியோரெல்லாம் சோனியாவை விட மிகவும் பின் தங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
சோனியாவுக்கு முன்பு, அதாவது 5வது இடத்தில் இருக்குகிறார் பெப்சி நிறுவன தலைமை நிர்வாகியான இந்தியப் பெண் இந்திரா நூயி.
இந்தப் பட்டியலில் கடந்த ஆண்டு சோனியா காந்திக்கு 13வது இடம் கிடைத்திருந்தது. ஆனால் இந்த ஆண்டு அதிரடியாக 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதற்கு முக்கியக் காரணம், இந்தியக் குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுத்த விவகாரத்தில் அவரது செல்வாக்கு கொடி கட்டிப் பறந்ததுதான்.
![]() |
பிரதீபா பாட்டீலை வேட்பாளராக தேர்வு செய்த விதம், அவரை வெற்றி பெறச் செய்த விதம், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுகளைப் பெற்ற விதம் ஆகியவற்றின் காரணமாக சோனியா காந்தியின் செல்வாக்கு உயர்ந்து அவருக்கு 6வது இடத்தைத் தேடித் தந்துள்ளது.
ஹில்லாரி கிளிண்டன் கூட சோனியாவை விட வெகுவாகப் பின் தங்கித்தான் உள்ளார். அவருக்கு 26வது இடம் கிடைத்துள்ளது. இங்கிலாந்து ராணி எலிசபெத்துக்கு 23வது இடமும், பில் கேட்ஸ் மனைவி மெலிண்டா கேட்ஸுக்கு 24வது இடமும் கிடைத்துள்ளது.
சோனியா குறித்து ஃபோர்ப்ஸ் இதழ் கூறுகையில், இத்தாலியில் பிறந்தவரான சோனியா காந்தி, காங்கிரஸ் கட்சியின் அசைக்க முடியாத தலைவராக உள்ளார். சோனியா காந்தியின் விருப்பத்திற்குரிய பிரதீபா பாட்டீலை குடியரசுத் தலைவர் தேர்தலில் நிற்க வைக்க சோனியா முடிவு செய்தபோது அதை அவரது கட்சியினர் மட்டுமல்லாது கூட்டணிக் கட்சியினரும் ஏற்றுக் கொண்டனர்.
இந்தியாவின் முதலாவது பெண் குடியரசுத் தலைவர் என்ற பெருமை பிரதீபாவுக்குக் கிடைத்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் சோனியா காந்திதான் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலில் 2வது இடத்தில் சீன துணைப் பிரதமர் வூ யி உள்ளார். அமெரிக்க வெளியுறவு அமைச்சர் காண்டலீசா ரைஸ் 4வது இடத்தில் உள்ளார்.
முதல் பத்து இடங்களில் 5 இடங்களை அமெரிக்கர்கள் பிடித்துள்ளனர். இந்தியா, சீனா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு 3 இடங்கள் கிடைத்துள்ளன.
துபாயைத் தலைமையிடமாகக் கொண்ட ஜம்போ குழுத் தலைவரும், இந்தியப் பெண்மணியுமான வித்யா சப்ரியாவுக்கு 97வது இடம் கிடைத்துள்ளது.
ஜோர்டான் ராணி ரனியாவுக்கு 82வது இடமும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இளவரசி ஷேகா லுப்னா அல் குவாசிமிக்கு 99வது இடமும் கிடைத்துள்ளது.














Click it and Unblock the Notifications